ஜப்பான் – கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ

ஜப்பான் பயணக்கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. மிக இயல்பான ஓட்டமாக நீங்கள் ஜப்பானின் பலமுகங்களைச் சொல்லிச்செல்கிறீர்கள். அந்தவகையான பயணக்குறிப்பின் பயன் மற்றும் எல்லை பற்றி முன்னரே எழுதிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறீர்கள்.

என்னைப்பொருத்தவரை இம்மாதிரியான பயணக்குறிப்புகள் வழியாக வரும் ஒரு சித்திரத்தையே பெரும்பாலும் நினைவில் வைத்திருக்கிறேன். சீரியஸான வரலாற்றுநூல்கள் பெரிதாகப் பயன்படுவதில்லை. ஏனென்றால் நமக்கு ஜப்பானிய வரலாறு அவ்வளவு தேவைப்படுவதில்லை. நமக்கு என்னதேவையோ அது மட்டும் உள்ளவை இந்த கட்டுரைகள். எவை நம்மை வந்து தொடுகின்றனவோ அவை மட்டுமே இவற்றில் உள்ளன. ஆகவே இவை முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஜப்பானிய உணவைப்பற்றி சொன்னதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒருமுறை ஜப்பான் சென்றிருக்கிறேன். எல்லாச்சாப்பாட்டிலும் மீன்வாசனை இருக்கும். எங்களூரில் உளும்புநாத்தம் என்று சொல்வோம்

எஸ்.ஸ்ரீதர்

அன்புள்ள ஜெ

ஜப்பானியப் பயணக்கட்டுரையை விரும்பி வாசித்தேன். ஜப்பானின் கட்டிடக்கலைபற்றியும் ஜென்பண்பாடு பற்றியும் உங்கள் வரிகள் மின்னல்போல் வந்துகொண்டே இருந்தன. என்ன ஆச்சரியமென்றால் இவற்றில் பலவற்றை நாமும் கவனித்திருப்போம். ஒட்டுமொத்தமாக தொகுத்து அளித்திருந்தீர்கள். ஜென் பௌத்தம் மனதுக்குள் ஓர் அமைதியை உருவாக்குவது என நினைத்திருந்தேன். அது உண்மையில் ஆன்மிகமான ஓர் அராஜகம் என்ற வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது

ஜப்பானின் வரலாற்றை வெவ்வேறு காலகட்டங்களாக பிரித்து வாசிக்கலாம். நீங்கள் அந்த வரிசையிலேயே பயணம் செய்திருக்கிறீர்கள். உங்கள் பயணத்தை ஒருங்கமைத்த நண்பர் செந்தில்குமார் பாராட்டுக்குரியவர்

ராஜசேகர்


அன்புள்ள ஜெ

ஜப்பானியப் பயணக்குறிப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான திறப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தன. உங்கள் கவனம் அங்குள்ள சிறிய விஷயங்களைக் கவனிக்கிறது. அதிலிருந்து தொட்டுத்தொட்டு பல விஷயங்களுக்குச் செல்கிறீர்கள். இந்த இணைப்புதான் கட்டுரையை நினைவில் நிறுத்தியது

உதாரணமாக, மெய்ஜி சீர்திருத்தம் என்பதை ராஜராஜசோழன் செய்த ஆகமமுறைக்கு ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததைச் சொல்லலாம். இத்தகைய பரந்துபட்ட செய்திகள்தான் ஒரு பயணக்கட்டுரையை சுவாரஸியமாக ஆக்குகின்றன

செந்தில்குமார்

 

ஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25
அடுத்த கட்டுரைஒரிசாவின் லகுலீசர்