வாசிப்பு மாரத்தான்

 

நண்பர்களுக்கு வணக்கம் ! கடந்த முறை எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் பாலுமகேந்திரா நூலகத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயமோகன் துவங்கி வைத்த ஆயிரம் மணிநேர வாசிப்பு பற்றியும் அதனுடைய அவசியம் பற்றியும் பேசினேன் அப்பொழுது ஆயிரம் மணி நேரம் முடியாவிட்டாலும் 100 மணி நேர வாசிப்பிலிருந்து நாம் துவங்கலாமே என்று அந்த கூட்டத்தில் பேசினேன். அதை அஜயன் பாலா அவர்கள் இப்பொழுது முன்னெடுத்திருக்கிறார்கள் நாளை காலை ஒரு மாரத்தான் வாசிப்பு துவங்க இருக்கிறது.

வசந்தபாலன்

[பிகு. ஆயிரம் மணிநேர வாசிப்பு இயக்கம் நான் தொடங்கியது அல்ல.  அதை தொடங்கியவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். அதை என் தளத்தில் வெளியிட்டேன். தொடர்ச்சியான செய்திகளும் வெளியிடப்பட்டன. இன்று நான் அறிய மூன்று நண்பர்குழுக்களில் ஆயிரம் மணிநேர வாசிப்பியக்கம் நிகழ்கிறது

 

வசந்தபாலனுக்கும் அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்

 

– ஜெ]

முந்தைய கட்டுரைகதிரவனின் தேர்-7
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20