கவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது

வெயில்

2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது கவிஞர் வெயில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது

“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.
வெயிலுக்கு வாழ்த்துக்கள்
செய்தி
கவிஞர் வேல் கண்ணன்
அறங்காவலர்
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை
அடையாறு
சென்னை.
முந்தைய கட்டுரைகதிரவனின் தேர்-8
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21