தொல்பாறைகளுடன் உரையாடுதல்…

மகராஷ்டிரத்தில் மால்வான் அருகே தொன்மையான பாறைப்படிவு ஓவியங்கள் கண்டடையப்பட்டதுமே  அங்கே செல்லவேண்டும் என்று கிருஷ்ணன சொல்லத் தொடங்கிவிட்டார். கூடவே ஒரு மழைப்பயணம் பற்றிய திட்டமும் இருந்தது. தென்மேற்குப் பருவக்காற்றைத் தொடர்தல். இரண்டையும் ஒன்றாக்கிவிட்டோம். பெங்களூரில் இருந்து ரத்னகிரி வரை. மால்வானிலும் குடோப்பியிலும் தொல்லோவியங்கள். வழியில் பெல்காமிலும் கடக்கிலும் ஆலயங்கள்

நான், கிருஷ்ணன்,ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு சிவா, சென்னை செந்தில், ஜிஎஸ்வி நவீன், சக்தி கிருஷ்ணன்,பெங்களூர் கிருஷ்ணன், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன், மணிமாறன், திருமாவளவன் என 12 பேர் ஒரு வேனில் இன்று காலை பெங்களூரிலிருந்து கிளம்புகிறோம். ஒருவாரம் பயணம்

நான் 11 அம் தேதி காலையே பெங்களூர் வந்தேன். 6 ஆம் தேதி புவனேஸ்வரில் இருந்து கிளம்பினேன். எட்டாம்தேதி சென்னை வழியாக நாகர்கோயில். 10 ஆம்தேதி மாலையே பெங்களூருக்கு கிளம்பிவிட்டேன். மிக நெருக்கமாக இத்தனை நீண்ட பயணங்கள் முன்பு செய்ததில்லை.

முந்தைய கட்டுரைஇ.பாவை வணங்குதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13