வாசிப்பு எனும் நோன்பு
வாசிப்பு நோன்பு- கடிதங்கள்
வாசிப்புச் சவால் -கடிதம்
அன்புள்ள ஜெ
ஆயிரம் மணிநேர வாசிப்புச் சவாலை எனக்கு நானே விடுத்துக்கொண்டேன். நான் அதை எவருக்குமே சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கே நம்பிக்கை இல்லை. நான் வாசித்தது எல்லாமே 30 வயதுக்குள்தான். சென்ற எட்டாண்டுகளாக அனேகமாக புத்தகம் என எதையுமே வாசிக்கவில்லை. வாசிப்பு முழுக்க இணையத்தில்தான். அதிலும் உதிரிப்பதிவுகள்.
இந்த இணைய வாசிப்புக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அது அவ்வப்போது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு தரப்பைச் சொல்லி கூச்சலிடுவதுதான். எங்கு பார்த்தாலும் அதுவாகவே இருப்பதனால் நாமும் அதில் மூழ்கிவிடுகிறோம். கொஞ்சநாளில் அதெல்லாமே மறைந்துவிடுகிறது. இன்னொன்று ஆரம்பமாகிவிடுகிறது. நாம் வாசிக்கிறோம் என்ற எண்ணம் இருக்கும். அறிவார்ந்து செயல்படுகிறோம் என்றும் சொல்லிக்கொள்வோம். உண்மை அப்படி அல்ல என்று நமக்கே தெரியும்.
எந்த நூலையும் முழுசாகப் படிக்கவில்லை என்றால் நம்மிடம் எதுவுமே தங்குவதில்லை. புரட்டிப்பார்ப்பதில்கூட பொருள் இல்லை. இந்த வாசிப்புச்சவாலை ஏற்றுக்கொண்டபின் 23 மணிநேரம் வாசித்திருக்கிறேன். இதில் பெரும்பாலானவை ஆங்கில நூல்கள். தமிழில் க.நா.சு, சி.சு.செல்லப்பா, சிதம்பரசுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன் போன்ற சென்றகால எழுத்தாளர்களை வாசித்தேன். அவர்களை ஏற்கனவே வாசித்ததில்லை. நமது வாசிப்பு சமகால நூல்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. அவர்களை வாசிப்பது பெரிய ஒரு பண்பாட்டுப்புரிதலை அளித்தது.
எஸ்.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெயமோகன்,
போதைமீள்கையும் வாசிப்பும்
அரியணைச் சூதுகளும் வாசிப்பும்
காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்
அரியணைகளின் போர் – வாசிப்பு -கடிதங்கள்
அரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்