புரூஸ் லீ – கடிதங்கள்

பின்நவீனத்துவம்-  புரூஸ் லீ

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

டிராகனின் வருகை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் சார்,

நலமா?

நீங்கள் எழுதிய ஜப்பான் ஒரு கீற்றோவியம் 2 மற்றும் கடலூர் சீனு அவர்கள் எழுதிய டிராகனின் வருகை படித்தேன். பழைய நினைவுகள் மீண்டும் வந்தது.

புரூஸ் லீ நடித்த படம் பார்க்கும் அனைவரும் அவராகவே ஆகிவிடுவார்கள். சிறு வயதில் என் தந்தை சீன சண்டை படங்களுக்கு பெரும்பாலும் அழைத்து சென்று விடுவார். சண்டை கனவுகளிலேயே சிறு வயது கடந்தது. என்னை பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் தான் அருகிலிருக்கும் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டார். கற்க ஆரம்பித்தது கராத்தே தான், ஆனால் அதிகம் பேசியது குங்பூ படங்களை பற்றி தான். இன்றும் நண்பர்களுடன் சினிமா கதாநாயகர்கள் வரிசையில் யார் சிறந்த வீரக்கலை நிபுணர் என்ற பேச்சு வந்தால் அதில் புரூஸ் லீக்கு முதலிடம் என்பதை அனைவரும் ஏற்று கொள்வார்கள். அடுத்த இடம் யார் என்பதில் தான் விவாதம் ஆரம்பிக்கும்.

இது வரை வந்த திரை படங்களில் கூட புரூஸ் லீ அளவுக்கு தொழில் நுட்பங்களை மன ஒருமையுடன் செய்தவர் யாருமில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அளவுக்கு நேர்த்தியுடன் செய்பவர் இருக்கலாம், பல நூறு விதமான தாக்குதல் மற்றும் தடுக்கும் முறைகளை காட்டியவர்கள் இருக்கலாம். ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென், ஸ்டிவன் சீகல் என அதன் வரிசை நீளும். ஆனால் தான் செய்யும் அசைவுகளில் முழு மன ஒருமையுடன் கூடிய சீற்றமும் அதில் வெளிப்படும் வேகமும், ஆதனால் உருவாகக்கூடிய அசுர பலமும் புரூஸ் லீயிடம் மட்டுமே இன்று வரை சாத்தியம் இத்தனைக்கும் அவர் தான் நடித்த ஐந்து படங்களிலும் பெரும்பாலும் அடிப்படை சண்டைகளை தான் செய்தார்.

மற்ற கலைகளில் உள்ள புதுமைகளை குங் பூவில் இணைத்து கொண்டு அந்த கலையை வேறு ஒரு பரிமானத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார்.

வாலிக்கு தன் எதிரில் நின்று சண்டை செய்பவரின் பாதி பலம் அவருக்கு வந்து விடும் என்ற வரம் உள்ளது போல் புரூஸ்லீ போல. தன்னபிக்கையும் மன ஒருமையும் உள்ளவர் முன் அவர் அளவுக்கவே பயிர்ச்சி உள்ளவர் மட்டும் நிற்க முடியும், இல்லையென்றால் எதிரில் நிற்பவர் விழிகளை பார்த்த உடனே தன் பலத்தில் பாதியை இழந்து விடுவார்கள்.

வாலி என்ற கதாபாத்திரமோ அல்லது டிராகன் எனும் சீன கற்பனை விலங்கோ வாழ்ந்ததா தெரியாது. ஆனால் தன்னை லிட்டில் டிராகன் என அழைத்துக்கொள்ள ஆசைப்பட்ட புரூஸ் லீ வாழ்ந்தார். ஆம் இன்றளவும் வீரக்கலை உலகில் அவர் ஒரு டிராகன் தான்.

நன்றி,
ரஜினிகாந்த் ஜெயராமன்.

அன்புள்ள ஜெ

ஜப்பானியப் பயணக்கட்டுரையில் சட்டென்று புரூஸ் லீ பற்றிய ஒரு குறிப்பும் அதைத் தொடர்ந்து ஓர் உரையாடலும் நிகழ்ந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இளமை முதல் புரூஸ்லீயின் ரசிகன். அவருடைய படத்தை ஹாஸ்டலில் வைத்திருந்தேன். இன்றைக்கும் வைத்திருக்கிறேன்

நான் புரூஸ்லீயிடமிருந்து கற்றது இரண்டு விஷயங்கள்

அங்குமிங்கும் நிலையில்லாமல் அலையக்கூடாது. நமக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்க்கவேண்டும். அது நம் அருகே வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கவேண்டும்

நம் கைக்கு அது எட்டும், நம்மால் அதை வெல்ல முடியும் என்று உறுதியாகும் வரை நாம் காத்திருக்கவேண்டும். அதன்பின்னரே தாக்கவேண்டும். தாக்கினால் ஒரே அடிதான். நாம் வென்றாகவேண்டும்

நாம் கோபம் இல்லாமல் ஆகக்கூடாது. ஆனால் கோபம் பொருமலாக ஆகக்கூடாது. அதை தேக்கிவைத்து தாக்கும்போது ஒரே வீச்சாக வெளிப்படுத்தி ஜெயிக்கவேண்டும். அவ்வளவுதான்

இதை நான் பல வியாபாரக்கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன்

எஸ்.ரவிச்சந்திரன்

 

 

ஜப்பான் ஒரு கீற்றோவியயம் 16

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -14

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -13

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -8

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14
அடுத்த கட்டுரைசாமுராய்களும் நின்ஜாக்களும்