நட்பெதிரி – கடிதம்

நட்பெதிரி

 

அன்பு ஜெயமோகன்!

 

முன்னொரு சமயம் motel என்பதற்கு ஒரு தமிழ்ப்பதம் தேடினேன். அதை a hotel for people who are travelling by car, with space for parking cars near the rooms என்கிறது Oxford. சென்னை சொற்களஞ்சியம் அதை உந்துலாவினர் தங்கல் மனை அமைவு என்று தமிழ்ப்படுத்தியது கண்டேன்.  motel-ன் சொற்பிறப்பியலை Oxford-ல் தேடினேன். Motor, hotel ஆகிய இரண்டு சொற்களின் சரிபாதிகள் motel-ஆக இணைக்கப்பட்டதை கண்டுகொண்டேன். இத்தகைய சொல்லாக்கத்தை blend அல்லது portmanteau word  என்கிறது Oxford. களஞ்சிய தமிழாக்கம் முற்றிலும் சரி என்று தோன்றியது. எனினும் அது நீண்டுவிட்டதால், ஏற்கெனவே உள்ள கோவேறுகழுதையை (mule) கருத்தில் கொண்டு, ஊர்திவிடுதியகம் என்று குறுக்கிப் பயன்படுத்தி வருகிறேன். இதையும் கருத்தில் கொள்ளவும்.

 

தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் நான் மொழிபெயர்ப்புத் துறையில் இடைவரவு விரிவுரையாளராகவும், ஆங்கிலப் போதனாசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். முன்னர் கனடாவில் தமிழாக்கம் பற்றி நான் உரையாடியபொழுது உங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதன் இணைப்பு அடியில் இருக்கிறது.

 

மணி வேலுப்பிள்ளை

 

அன்புள்ள மணி வேலுப்பிள்ளை,

 

நட்பெதிரி போன்ற சொல்லாடல்கள் எப்போது உருவாயின என்பதும் முக்கியமானது. நவீன உளவியல்தான் இச்சொற்களை உருவாக்கும் புரிதலையும் புரிந்துகொள்ளும் மனநிலையையும்  உருவாக்குகிறது.  முன்பு இதைப்போன்ற சில சொற்கள் அரிதாக இலக்கியங்களில் இருந்திருக்கலாம். இவற்றை வாழ்க்கையின் அன்றாட உண்மைகளாக ஆக்கியது நவீன உளவியல்தான். மனித உள்ளங்கள் இயல்பாக கருப்பு வெள்ளையாகச் செயல்படுவதில்லை என்று காட்டியதே அவை புரிந்த சாதனை

 

அனுகூல சத்ரு என்ற சொல் ஞாபகம் வருகிறது. ஆனால் அது நட்பெதிரி அல்ல. அனுகூலமாக இருக்கும் எதிரி. அல்லது நல்லது நினைத்து தீங்கு செய்பவன்

 

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10
அடுத்த கட்டுரைதத்துவ வாசிப்பின் தொடக்கம்