கம்பன் மொழி

கம்பன் சிலை தேரழுந்தூர்
கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
கம்பன் நிகழாத களங்கள்
கம்பன் கண்ட மயில்
கம்பனும் குழந்தையும்
கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி
கம்பராமாயணம் வகுப்பு
அணிகளின் அணிநடை
தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

அன்புள்ள ஜெயமோகன்,

கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். நாட்டு படலம் முப்பத்தி நாலாவது பாட்டு.

ஆறு பாய் அரவம், மள்ளர்
ஆலை பாய் அமளை, ஆலைச்
சாறு பாய் ஓதை, வேலைச்
சங்கின் வாய் பொங்கும் ஓசை,
ஏறு பாய் தமரம், நீரில்
எருமை பாய் துழனி, இன்ன
மாறு மாறு ஆகி, தம்மில்
மயங்கும் – மா மருத வேலி

இந்கதச்செய்யளில் கம்பர் ஓசைகளை பலவிதமான நுட்பமான சொர்களால் கையாண்டிருக்கிறார். ஆனால் இப்படி நுட்பமான வார்தைகள் வழக்கொழிந்துவிட்டதை காண்கிறோம். கேள்வி: இது காலப்போக்கில் வழக்கொழிந்ததா அல்லது இது கவிதை களத்திர்கான சொர்களா. கேள்வியின் நோக்கம்:  எவ்வாறு இத்தகைய சொற்களின் சரியான உணர்வை உள்வாங்கிக் கொள்வது. ஒரு நல்ல தமிழ்அகராதி போதுமா?

நன்றி,

ஜெயகணேஷ்

***

அன்புள்ள ஜெ

ஊட்டி அரங்கில் இருந்து ஒருமுறை நாஞ்சில்நாடனின் கம்பராமாயண வகுப்பைக் கேட்டேன். கம்பராமாயணத்தை வாசிக்கவேண்டிய முறை அறிமுகமாகியது. அதன்பின் நான் ஊட்டிக்கு வர முடியவில்லை என்றாலும் ஏழாண்டுகளாக ஒவ்வொரு நாளும் கம்பராமாயணத்தை சிறிதளவேனும் வாசித்து வருகிறேன். தமிழில் இப்படி அள்ள அள்ள குறையாத ஒரு பெருங்காவியம் இருப்பதே மெய்சிலிர்க்கவைக்கிறது. கம்பரசம் எழுதி கம்பனை மறுபிறப்பு எடுக்கவைத்த சி.என்.அண்ணாத்துரைக்கும் அதை நல்வாய்ப்பாகக் கொண்டு கம்பனை மீண்டும் நிலைநிறுத்திய காரைக்கு சா கணேசன் அவர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம்

உங்கள் கம்பராமாயணக் குறிப்புகளை வாசித்தேன். அவற்றை முழுமைப்படுத்தி நீங்கள் கம்பனைப்பற்றி ஒரு நல்ல ரசனைநூலை எழுதிமுடிக்கவேண்டும்

ஆ.சுந்தரமூர்த்தி

***

மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு

 

முந்தைய கட்டுரைவீரமான்: ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரைபழைய முகங்கள்