ஓஷோ மயக்கம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்கள் தானே! உங்களிடம் ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவசியம் கடிதம் போடுவீர்கள் என நம்புகிறேன். நான் ஓஷோவோட புத்தகங்கள் படிச்சிட்டு இருக்கேன். நான் அவரோட வார்த்தைகள் எல்லாம் நம்பறதில்ல சார். ஆனால் அவர் நிப்பாட்டி நிப்பாட்டி பேசுறாரே.. அதுல ஏதோ ஒரு மாயசக்தி இருக்கும் போல.. எதுக்கு கேட்கிறேன்னே தெரியல ஆனால் கேட்டிக்கொண்டே இருக்கேன்.

அவரு சொல்ரதுல நிறைய தப்பு இருக்கு… Dravidians அப்படினு  தென்இந்தியர்களைச் சொல்ராரு…இந்தமாதிரி நிறைய பொய்கள் இருந்தும் கூட கேட்டு கேட்டு பழகிவிட்டேன். இந்த Addictionல இருந்து வெளிய வருவதுக்கு உங்களிடம் யோசனை கேட்க்க தான் இந்த கடிதம். இப்பகூட பாருங்க அவரோட Audio course “Just like that” கேட்டுக்கிட்டே தான் கடிதம் எழுதுறேன்

நான் BPOல வேலை பார்க்கிறேன் இப்போ. எனக்கு 1 நாள் தான் Leave. பல நல்ல எழுத்தாளர்கள் எனக்கு தமிழ்ல பிறமொழில இருந்தாலும் அவங்க எல்லாரையும்விட ஏன் இவரவே படிக்கிறேன் எனக்கு புரியல. ஒருவேளை ஜெயமோகன் மாதிரி அறிவுஜீவிகளுக்கு ஓஷோவ பிடிக்காதனால, நான் படிக்கிறத நானே சந்தேகபட்டுக்கிறேனோ?

பின்குறிப்பு:

ஆங்கிலம் மிக எளிமையாக எளியமனிதர்க்கும் புரியமாதிரி போய் சேருவதுக்கு ஏற்றவாறு பேசுறாரு.. அதனால தானோ… நீங்க என்ன நினைக்கிறீங்க? ஏதோ உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.. ஓஷோவ தவிற எதையுமே படிக்கமாட்றேன் அதான் பிரச்சனைனு தோணுது…இந்த கட்டத்த தான்டுறது கஷ்டமா இருக்கு ஐயா! புதுமைபித்தன், ஜெயகாந்தன், .சு.நல்ல பெருமாள் இவங்க புத்தகம் நாவல் படிச்சிருக்கேன்… ஆனால் தொடர்ந்து அவங்கள பின்தொடர முடியல சார்..

ராமகிருஷ்ணன்

***

அன்புள்ள ராமகிருஷ்ணன்

எனக்கு ஓஷோ பிடிக்காது என்றில்லை, பிடிக்கும். அவர் என் ஆசிரியர்.

ஓஷோ என்றல்ல எந்த ஒரு சிந்தனையாளனிலும் ஆட்பட்டு இருப்பது நல்லதே. வேறு எதிலாவது அப்படி ஈடுபடுவதை விட மேலானதே. சீக்கிரம் வெளியே வந்துவிடுவீர்கள். இன்னொருவரில் அடுத்தபடியக ஈடுபடுவீர்கள் என்றால் நல்லது

ஆனால் உங்கள் பிரச்சினை நீங்கள் ‘கேட்பதில்’ உள்ளது. நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் ஆழமாக கவனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். அச்சொற்கள் உங்கள்மேல் ஒழுகிச்செல்கின்றன. அவர் சொல்வதைப்பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ஆகவேதான் இந்த ‘அடிக்‌ஷன்’

அவருடைய நூல்களை வாசியுங்கள். வாசிப்பு உங்களுக்கு கடினமாக இருந்தால் நீங்கள் ஓஷோவில் சிக்கிக்கொண்டிருக்கவில்லை. ‘ஆடியோ’ மயக்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஒரே வழி மூர்க்கமாக வாசிப்பில் மூழ்குவதுமட்டுமே. ஓரிரு ஓஷோ நூல்களை வாசித்து முடித்தபின் என்ன நிகழ்கிறதென்பதைப் பாருங்கள்

ஜெ

  • குறிச்சொற்கள்
  • ஓஷோ
முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -15