எழுதும் முறை – கடிதங்கள்

மாயாவிலாசம்!

அன்புள்ள ஜெ அய்யா

 

தங்கள் செல்பேசித் தமிழ் கட்டுரை பற்றி எனது எண்ணங்கள்

 

நம்மில் சிலர் புது கண்டுபிடுப்புகளை வேகமாக கைய்யாள தொடங்குகிறார்கள் ஆனால் பலரிடம் ஒரு தயக்கமோ அச்சமோ இருக்கிறது. smart போன் அறிமுகமான சில தினங்களிலேயே என்னுடன் பணியாற்றிய சிலர் கைபேசியிலேயே நீண்ட மின்னஞ்சல்களை எழுதத் தொடங்கிவிட்டனர். நான், ஆமாம், OK, போன்ற பதில்களைத் தாண்டி எதுவும் எழுத முயற்சிக்கவில்லை. உடனே மடிக்கணினிக்கு தாவி விடுவேன்.   கூட பணிபுரிந்த ஒருவர் மிகப் பெரிய techinical propsalகளைக் கூட கைபேசியில் எழுதிவிடுவார். (எண்னை விட பத்து வயது இளையவர்). இன்றுவரை நான் blog எழுதும்போது laptopல் தான் எழுதுகிறேன் – எளிதாக எழுதும் தொழில் நுட்பமும் மென்பொருளும் செல்போனிலும் iPad இலும் வந்தபிறகும் கூட. இதை நான் எனது தேர்ச்சியின்மை என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்.

 

செல்போனில் இலக்கியம் எழுத முடியுமா என்பதைப் பற்றி நான் நினைப்பது… இந்த அச்சமும் தயக்கமும்  மனிதன் குகைச் சுவரில்  கிறுக்கியத்திலிருந்து ஓலைச்சுவடியில் எழுதும்  முறைக்கு மாறும்போதும் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அதே மாதிரி ஓலைச் சுவடியிலிருந்து papyrus காகிதத்திற்கு மாறிய போதும் ஏற்ப்பட்டிருக்கும். பின்  papyrus காகிதத்திலிருந்து – இன்றைக்கு நாம் உபயோகிக்கும் காகிதம். அதே மாதிரி காகிதத்திலிருந்து – typewriterக்கு மாறும்போதும் பின்னர் கம்ப்யூட்டருக்கு மாறும்போது. நீங்களும் காகிதத்திலிருந்து கணினிக்கு மாறியிருப்பீர்கள். பின் கைபேசிக்கு மாறுவதும் natural progression தானே?

 

ஆனால் காட்டாறு பெருக்கெடுத்து பாயும் வேகம் போல் உருவாகும் உங்கள் சிந்தனைகளை அதே வேகத்தில் இருவிரல் கொண்டு கைபேசியில் பதிவு செய்ய முடியுமா?  உங்களால் முடியும் என நினைக்கிறேன். விரைவில் நீங்கள் வெண்முரசுவின் ஒரு அத்தியாயத்தை கைபேசியில் எழுதுவீர்கள் – பலருக்கு அது inspiration ஆக அமையும் என்ற நம்பிக்கையுடன்

 

அன்புள்ள

ரமேஷ்

https://kaveripak.com

 

அன்புள்ள ஜெ

 

எந்தவகையான கருவியும் சிந்தனையை பாதிக்கும். ஆனால் உண்மையான கிரியேட்டிவிட்டி என்பது அந்த பாதிப்பை கடந்து செல்வதில்தான் உள்ளது. உதார்ணமாக, செல்பேசியில் எழுதும்போது அந்த மொழி உருவாக்கும் நிபந்தனையால் ஒருவரால் சிறப்புற எழுத முடியாமல் போனால் அவர் ஒரு சின்ன எழுத்தாளர். அவரால் அவ்வளவுதான் முடியும். கிரியேட்டிவிட்டி என்பது எப்போதுமே அடிப்படையான உந்துதல் கொண்டது.  அதற்கு தடைகள் முக்கியம். தடைகளை கடக்குபோதுதான் அதன் ஒரிஜினாலிடி வெளிப்படுகிறது

 

எஸ்.ராகவன்

செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13
அடுத்த கட்டுரைஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு