தாது உகு சோலை

கம்பன் சிலை தேரழுந்தூர்

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி

கம்பன் நிகழாத களங்கள்

கம்பன் கண்ட மயில்

கம்பனும் குழந்தையும்

கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி

கம்பராமாயணம் வகுப்பு

அணிகளின் அணிநடை

தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

வெண்முரசு வாசிப்பின் இடைவேளையில் சுவரேறி கம்பராமாயணம் என்னும் அவ்வுலகை கொஞ்சம் எட்டிபார்த்து பரவசத்தில் நிலையழிந்து விழுந்துவிட்டேன்.  கிட்டத்தட்ட இப்போது வெண்முரசு எப்படி எதிர்கொள்ளப்படுகிறதோ அப்படித்தானே கம்பராமாயணமும் எதிர்கொள்ளப்பட்டிருக்கும்.?

தாது உகு சோலை தோறும்,
சண்பகக் காடு தோறும்,
போது அவிழ் பொய்கை தோறும்,
புது மணல் தடங்கள் தோறும்,
மாதவி வேலிப் பூக வனம் தோறும்,
வயல்கள் தோறும்,
ஓதிய உடம்பு தோறும், உயிர்
என உலாயது, அன்றே.

இப்படி இனிமையால் அழகால் மொழியால் சரயு என்னுடையதாகி விடுகிறதே? சுப்ரதர் விருஷாலி பிரசேனனுக்காக பலாமரத்தடியில் காத்து நிற்பார்.  குருஷேத்திரத்தில் பலாமரம் வருமா? அது எனக்குத் தெரியாது.  ஆனால் குருஷேத்திரம் எனதாகிவிட்டது.  பிரம்மத்தை பெருமான் என்று சுவீகரிப்பதுபோல.  யாமறிந்த இன்மலர்கள் கொண்டு எம் வந்தனையும் வழிபாடும்.  பிரம்மம் மலர்களை நேசிக்கிறது, அது நாள்தோறும் நறுமண மலர்களை சூடுகிறது.

கம்பருக்கும் வெண்முரசு எழுதுபவருக்கும் ஓரே டெம்பிளேட்தான்.  ”எவ்ளோ பெரிய கவி / எழுத்தாளர் தன் திறமையை இப்படி வீணடிக்கலாமா?

உலகில் தமிழ்க்கவிஞன் என்று கொண்டுநிறுத்த உலகு தலைவணங்கி ஏற்கும் ஒரே சொல் கம்பன் என்பதாகத்தானே இருக்கமுடியும்?

இதெல்லாம் பலநூற்றாண்டுகளுக்கான சமாச்சாரம்.  நாம் சாவதற்கு முன்னமே தலையில் இடிந்துவிழும் நம் மாநில அரசின் குடியிருப்பு கட்டிடம் போன்றது அல்லவே.

அன்புடன்

விக்ரம்

கோவை

***

மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6

குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

முந்தைய கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -3
அடுத்த கட்டுரைஇரு விமர்சனங்கள் – கடிதங்கள்