செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

மாயாவிலாசம்!

அன்புள்ள ஜெ,

பயனுறு எழுத்தை செல்பேசியில் அடிக்கலாம், இலக்கியத்தை அடிக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. கண்டிப்பாக மொழிச்சிபாரிசு செய்யும் மென்பொருளின் உதவியுடன் அடிப்பது மிகமிகப்பிழையானது. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் நெறிகளில் ஒன்று கடிதங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது. சாதாரண செய்திக்கடிதங்களுக்கு வழக்கமான ஃபார்மாட் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட கடிதங்கள் தனிப்பட்ட முறையிலேயே எழுதப்படவேண்டும். புதிய சொற்கள் சொற்றொடர்கள் இருக்கவேண்டும். வழக்கமான சொற்றொரர்கள் டெம்ப்ளேட்கள் இருக்கக்கூடாது. உண்மையில் ஒருவருக்கு தனிப்பட்டமுறையில் எழுதும்போது டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்துவது ஒரு பெரிய இன்ஸல்ட்.

அலுவலகக் கடிதங்களிலேயே இப்படி என்றால் இலக்கியத்தை டெம்ப்ளேட் சொற்களைக்கொண்டு எழுதுவது ஒரு பெரிய வெட்டிவேலையாகவே முடியும். வழக்கத்திற்கு மாறானது, வழக்கத்தை மீறியது ஆகியவையே நல்ல உரைநடையின் சிறப்பம்சங்கள் என நினைக்கிறேன்.

எஸ்.ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ ,

இந்த கடிதத்தை நீங்கள் பயன்படுத்திய அதே  செயலியில்தான்  தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்;

“மொழிக்கு பிழையாக  ஆகும் ஒர்  இயல்பு உண்டு। நதி கரைகளை முட்டிக்கொண்டிருப்பதுபோல। கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்வதுபோல மொழியை கொண்டுசெல்லவேண்டும்। மிகவும் பழகினால் செக்குமாடாகிவிடும்”;

உண்ணமைதான், மேலும் நம் எண்ணத்தை, சிந்தனையை  மொழியை கொண்டு அணுகும் போதே சிந்தனையின் கூர் மழுங்கிவிடுகிறது அல்லவா? எண்ணத்தில் உருவாகும் மொழியின் வேகத்திற்கும், செயலியில் தட்டச்சு வேகத்திற்கும் ஒருமித்த ஒரு  synargize உருவானால், ஓரளவேனும் கூர்மையை மழுங்காமல் பார்த்துள்கொள்ளலாம் ।।।

“உள்ளமும் மென்பொருளும் இணைந்த மாபெரும் மென்பொருள் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது”,
நான் கருதுகிறேன் அந்த மாபெரும் மென்பொருள் ஏற்கனவே உருவாகி விட்டன, இவ்வாறு கூறலாம் நாம் இப்பொழுது 2 பாயிண்ட்  O இல் இருக்கிறோம்
artificial intelligence பற்றி நீங்கள் ஒரு அறிவியல் புனை எழுத வேண்டும் என் நீண்ட நாள் ஆசை।

ஒவொரு நேரத்திலும் நீங்கள் வாழக்கை கோணத்தை எனக்கு அளிக்கிறீர்கள், மருத்துவ மனையில் சிகிழ்ச்சியிலும், வலியிலும் வாழ்க்கையை நோக்கும் விதம், அருமை என் சிரம் தாழ்ந்த வணக்கம் ।।। எந்த இடத்திலும் மீண்டும் மீண்டும் உரக்க கூறுவேன் நான் உங்கள் வாசகன், நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியன்,

ராம்

***

முந்தைய கட்டுரைஅரியணைகளின் போர் – வாசிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்