சபரிநாதனுக்கு யுவபுரஸ்கார் விருது

 

2019 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். சாகித்ய அக்காதமி விருதுகள் கவிஞர்களுக்கு பொதுவாக அளிக்கப்படுவதில்லை. அவர்கள் எழுதியவை பெரிய ‘வால்யூம்கள்’ அல்ல என்பதே காரணம். சபரி விருது பெறுவது மேலும் பல கவிஞர்கள் கவனிக்கப்பட வாய்ப்பாகும்

யுவபுரஸ்கார் ஒரு படைப்பாளிக்கு நல்ல தொடக்கம். கருத்தரங்குகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அவற்றை சபரிநாதன் எளிய தயக்கங்களால் தவறவிடமாட்டார் என எண்ணுகிறேன். தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய அளவில் கொண்டுசெல்ல அது ஒரு வாய்ப்பு. அது அவரையும் விரிவடையச் செய்யும். எங்கும் தன் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கங்களுடன் அவர் செல்லவேண்டும். சக கவிஞர்களின் கவிதைகளையும் அறிமுகம் செய்யவேண்டும். முன்னர் இவ்விருதை பெற்ற சுனீல் கிருஷ்ணன் அதை மிகச்சிறப்பாக நிகழ்த்தினார்.

2017 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு வழங்கப்பட்டது. அவர் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

சபரிநாதன் நேர்காணல்

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

சபரிநாதன் கவிதைகள் 4

சபரிநாதன் கவிதைகள் 3

சபரிநாதன் கவிதைகள் 2

சபரிநாதன் கவிதைகள்

தேவதச்சன் –சபரிநாதன் உரை

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

 

முந்தைய கட்டுரைகாட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைதாக்கப்பட்டேன்