காந்தியும் மார்க்சும்

காந்தி 150 –  காந்தியும் கார்ல் மார்க்சும் –  ஒரு புதிய பார்வை –  அகீல் பில்கிராமி

பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

ணக்கம். தங்கள் நலம் அறிய விழைகிறேன். காந்தி பற்றிய கட்டுரைகளுக்காக படிக்கும் போது அகீல் பில்கிராமி எனும் ஒரு இந்திய தத்துவவியல் அறிஞருடைய காந்தி பற்றிய பேட்டியையும் அவரது  ” காந்தி ஒரு தத்துவ அறிஞர் ” என்ற ஆங்கில வெளியீடு ஒன்றையும் படித்தேன்.அவரது பேட்டியிலிருந்து எனது புரிதலை ஒரு சிறிய கட்டுரை வடிவில் தொகுக்க முயற்சி செய்து உள்ளேன். அதன் இணைப்பு  https://manianviews.blogspot.com/2019/02/150.html

பொதுவாக காந்தி மார்க்ஸ் ஆகியோரிடேயே ஒத்த கருத்துக்கள் இருப்பதாக கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என சொல்லி நிராகரிப்பதையே காண்கிறோம். ஆனால் முதலாளித்துவத்தின் கேடுகள்,இயற்கை வளங்கள் பயன்பாடு ஆகியவை பற்றி இருவரும் அநேகமாக ஒத்து போகின்றனர் என அகீல் கூறுகிறார்.

காந்தி கார்ல் மார்க்ஸ் இடையே சுதந்திரம்,சமத்துவம் ஆகியவை பற்றிய மிக முக்கிய கருத்தாக்கங்கள் பற்றிய பார்வை கூட கிட்டத்தட்ட இருவருக்கும் ஒன்றாக உள்ளது எனவும் அதனை விட மேலான ஒன்றை அவர்கள் வலியுறுத்துவதாக அவர் சொல்கிறார். அதை அவர் unalienated life என்று சொல்கிறார் .

காந்தி பற்றிய பல ஆக்கபூர்வமான  நேர்மையான கண்ணோட்டத்தை நான் உங்கள் “இன்றைய காந்தி” மூலம் தான் பெற்றுள்ளேன். அகீல் பில் கிராமி  அவர்களின் இந்த பார்வை எனக்கு புதியதாக இருந்தது. கார்ல் மார்க்ஸ் அவர்கள் இயற்கையை மனிதன் முழுமையாக தன்னுடைய பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம் என கூறி இருப்பதாக படித்த நினைவு. (உங்கள் தளத்தில் என நினைக்கிறேன்). இதனை பற்றி தங்களின்  கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

(Ref: Frontline March 30,2018 – Gandhi, Marx & the ideal of an unalienated life. Interview with Akeel Birgrami.)

தங்களுக்கு என் மரியாதையும் அன்பும்

எஸ் சுப்ரமணியம்

கும்பகோணம

***

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65
அடுத்த கட்டுரைபோதைமீள்கையும் வாசிப்பும்