2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இளங்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத் தொகுதிக்காக. விழா வரும் ஜூன் 9 ஆம் தேதி நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரன் பிறந்தநாள்.
அன்று அரங்கு எடுக்கப்படுவதனால் வழக்கம்போல மதியம் ஒரு சிறிய கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் நண்பர்களால் குறிப்பிடத்தக்கவை என தெரிவுசெய்யப்பட்ட மூன்று தொகுதிகளை முன்வைத்து மூவர் பேசுகிறார்கள்
நேரம் மதியம் 2 மணி
இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கு ,தி.நகர் சென்னை
நிகழ்ச்சி நிரல்
மதியம் 2 மணி முதல் 5 மணிவரை சிறுகதைக் கருத்தரங்கு
வரவேற்புரை – கவிதா
அரங்கு அறிமுகம் – மாரிராஜ் இந்திரன்
சுரேஷ் எழுதிய சிறுகதைத் தொகுதி பாகேஸ்ரீ –
பேசுபவர்விஷால்ராஜா
சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறுகதைத் தொகுதி –வெளிச்சமும் வெயிலும் –
பேசுபவர் காளிப்பிரசாத்
அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி பச்சைநரம்பு –
பேசுபவர் சுனில் கிருஷ்ணன்
மாலை 6 மணி முதல் 830 வரை விருதுவிழா
பங்கேற்பவர்கள்
சௌந்தர்,
ராஜகோபாலன்,
மலையாளக் கவிஞர் பி.ராமன்,
தேவதேவன்
அருணாசலம் மகாராஜன்,
ஜெயமோகன்
ச.துரை