இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா?
கேரளத்தில் ஏன் கம்யூனிஸ்டுகள் சக்திவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு கோரவில் உள்ள நல்ல பதில்கள்
https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala
இந்த பதில் மிகவும் விவரமானது
https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala/answer/Arun-Mohan-അരുൺ-മോഹൻ?ch=3&share=23922d7c&srid=tiqZ
இதற்கு தொடர்பில்லாத ஒரு செய்தி
தமிழிலில் கோரா தளம் இயங்குகிறது இதில் தமிழில் கேள்வி பதில்களை பார்க்கலாம்
ராம் குமரன்
அன்புள்ள ஜெ
கேரளத்தில் இடதுசாரிகளின் நிலை பற்றி விரிவாக எழுதியிருந்தீர்கள். அதில் கேரளத்தில் அவர்களுக்கு இருக்கும் அழுத்தமான கிராமிய அடித்தளம் பற்றி ஆழமாக எழுதியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் பார்க்க மறந்த ஒரு விஷயம் உண்டு. இன்றைய கேரளத்திற்கு கம்யூனிசம் தேவையா என்று
இன்றைய கேரளம் மிகப்பெரிய நுகர்வோர் சமூகம். நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அங்கே வறுமை இல்லை. அது மணியார்டர் எகானமி. அங்கே உழைப்பாளிகள் அனேகமாக இல்லை. இருக்கும் உழைப்பாளிகள் பெரும்பாலும் வட இந்தியர்களும் தமிழர்களும்தான். அங்கே உள்ள வாழ்க்கைமுறையில் கம்யூனிஸக் கொள்கைக்கு என்ன இடம்?
அதாவது அங்கே கம்யூனிசம் தேவையில்லாமல் ஆகிவிட்டது. அங்கே சென்ற இருபது ஆண்டுகளாக வேள்விகளும் பூசைகளும் பெருகி வருகின்றன. இந்தியாவிலேயே இந்து மதச்சடங்குகள் இவ்வளவு நடப்பது கேரளத்தில்தான். எல்லா மதங்களும் வளர்கின்றன
அங்குள்ள இளைஞர்களுக்கு இன்றைக்கு அரசியல் விருப்பங்களில்லை. அவர்கள் நுகர்வுப்பண்பாட்டில் திளைக்கிறார்க்ள். அவ்ர்கலின் இலட்சியமே வெளிநாடு செல்லவேண்டும் என்பதுதான். ஆகவே அங்கே கம்யூனிஸம் எவருக்குமே தேவையில்லை
அங்கே கம்யூனிசம் பேசுவது யார்? ஆட்டோதொழிலாளர்கள் போன்ற ஒரு சிறிய சி.ஐ டி யூ கூட்டம். அவ்வளவுதான். கொஞ்சம் ஜர்னலிஸ்டுகள். அதற்குமேல் ஒன்றும் இல்லை. அங்கே கம்யூனிசம் இருப்பது அதன் பழைய அடித்தளம் இன்றைக்கும் இருப்பதனால்தான். ஒரு வகை மதநம்பிக்கைபோல அது இருக்கிறது. ஆனால் எவ்வளவுகாலம் அது நீடிக்கமுடியும்?
ஜெகன்