மழைக்காலநிலவு

தட்சிணாமூர்த்தி

அன்புள்ள ஜெ,

மலையாள இசைமையமைபபளர்களில் நான் மிகப்பெரிதாக மதிப்பவர்களில் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி. மலையாள இசையமைப்பாளர்களில் அவர்தான் மூத்தவர் என நினைக்கிறேன். ஆனால் எண்பதுகள் வரை பாட்டு போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் கர்நாடக சங்கீதத்தின் சாயலை விட்டு வெளியே செல்லாதவை. பெரும்பாலும் தெளிவான ராக அடையாளம் கொண்டவை. ஆனால் அந்த ராகத்தை சரியான பாவத்துடன் அவர் இணைக்கிறார். நிறைய பாடல்களை நான் நூறுமுறைக்குமேல் கேட்டிருப்பேன்.

இந்தப் பாடல் அதில் ஒன்று. மலையாள டிவி சேனலில் ஒருவர் இதை சூப்பர் ஸிங்கரில் பாடினார். வரிகள் புரியவில்லை. அங்கே இங்கே கேட்டு பொதுவாக ஒரு அர்த்தம் தெரியும். இந்துமுகி என்ற வார்த்தையை எப்படி மொழிபெயர்ப்பது? அந்த அழைப்பு அவ்வளவு அழகு. எனக்கு இந்தப்பாடல் ஒரு அழகான தாலாட்டுபோல தோன்றும். இரவுநேரத்திற்குரிய ராகம் நீலாம்பரி. இந்தப்பாடல் நீலாம்பரியின் அழகான வடிவம்.

எஸ்.ப்ரீதா

 

 

ஹர்ஷ பாஷ்பம் தூகி வர்ஷ பஞ்சமி வந்நு
இந்துமுகி இந்துமுகி
இந்நு ராவில் எந்து செய்வூ நீ?

ஏது ஸ்வப்ன புஷ்பவனம் நீ திரயுந்நு?
ஏது ராக கல்பனையில் நீ முழுகுந்நு?
விண்ணிலே சுதாகரனோ விரஹியாய காமுகனோ
இந்நு நின்றே சிந்தகளே ஆருணர்த்துந்நு?
சகி ஆருணர்த்துந்நு?

ஸ்ராவண நிஸீதினி தன் பூவனம் தளிர்த்து.
பாதிராவின் தாழ்வரையிலே பவிழமல்லிகள் பூத்து.
விஃபலமாய மதுவிதுவால் விரஹசோக ஸ்மரணகளால்
அகலே என் கினாக்களுமாய் ஞான் இரிக்குந்நூ!
சகீ ஞான் இரிக்குந்நூ1

பி பாஸ்கரன்

[தமிழில் ]

மெய்சிலிர்ப்பின் விழிநீர் உதிர
மழைக்கால ஐந்தாம்நிலவு வந்தது
நிலவுமுகத்தவளே நிலவுமுகத்தவளே
இன்று இரவில் என்ன செய்கிறாய் நீ?
என்ன செய்கிறாய் நீ?

எந்த கனவு மலர்த்தோட்டத்தை நீ தேடுகிறாய்?
எந்த காதல் கனவுகளில் மூழ்குகிறாய்?
விண்ணின் சந்திரனா? ஏங்கும் காதலனா?
இன்று உன் எண்ணங்களை யார் விரியச்செய்கிறான்?
தோழி யார் விரியச்செய்கிறான்?

ஆவணி இரவின் பூவனம் தளிர்கொண்டது
நள்ளிரவின் சமவெளியில் பவளமல்லிகைகள் பூத்தன
நிறைவேறாத தேனிலவால் பிரிவின் துயர்நினைவுகளால்
தொலைவில் என் கனவுகளுடன் நான் இருக்கிறேன்
தோழி நான் இருக்கிறேன்.

படம் முத்தச்சி 1971
இசை தட்சிணாமூர்த்தி
பாடல் பி.பாஸ்கரன்
பாடகர் ஜெயச்சந்திரன்

முந்தைய கட்டுரைதும்பி
அடுத்த கட்டுரைஅய்யா!