அர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

அன்பின் ஜெ..

 

அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்திலிருந்து கடலூர் சீனு வழியாக  மருத்துவர் உதயகுமார் தொடர்பு கொண்டார்.

 

அவரது செய்தி பின்வருமாறு:

 

வணக்கம் நண்பரே…

எனது பெயர் பா.உதயகுமார், நான் அரவிந்த் கண் மருத்துவ குழுமத்தில் பணிபுரிகிறேன்…

 

எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய பக்கத்தில் தங்களின் அரவிந்த் கண் மருத்துவ குழுமம் பற்றிய கட்டுரையான காந்திய முறையில் கண் மருத்துவம் கட்டுரையை வாசித்தேன்…

 

உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி… மிக நேர்த்தியாக, உள்ளார்ந்த உணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை… இத்தனை கோர்வையாக, நேர்மையாக, பலகட்ட புரிதலுடனும், பல்வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது…

தங்களுக்கு என் சார்பாகவும், அரவிந்த் சார்பாகவும் வாழ்த்துக்களும் நன்றியும்…

 

கட்டுரையில் நீங்கள் 60% இலவசமாகவும், 40% ரூபாய் 2000 பெற்றும் வருடத்திற்கு 3 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தீர்கள்…

 

அதில் சிறு திருத்தம்… 30% முற்றிலும் இலவசமாகவும் (through camp), 30% ரூபாய் 850 ற்கும் (Free walkin/subsidised), 40% பணம் செலுத்தக்கூடிய வகுப்பில் உள்ளவர்களுக்கு (paying) average ரூபாய் 12000ற்கும் (ranges from 6500 to 30000) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது…

மற்ற தகவல்கள் அனைத்தும் மிகச்சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது…

 

தங்களைப் போன்றவர்கள் அரவிந்தை பிரதிபலிக்கும் போது இங்கு பணிபுரிவதில் பெருமையும், கர்வமும் மேலிடுகிறது…

 

நாங்கள் ஊக்கம் கொண்டு மேலும் வேகமாகவும், கூடுதலாகவும், வீரியமாகவும், பரிவுடனும், பணிவுடனும் மக்கள் பணியில் ஈடுபட தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்களும், எழுத்துகளும் உதவி புரிகின்றன… தொடர்ந்து பயணிப்போம்…

 

நன்றி…

 

–       தவறு எங்கே நிகழ்ந்த்து என என் தரவுகளை மீண்டும் பார்த்தேன். மிகமுக்கியமான தரவு அரவிந்த் மருத்துவமனையின் இயக்குநர் துளசிராஜ் அவர்களின் டெட் உரை. இன்னொன்று என் அம்மாவின் கண்புரை சிகிச்சைக்காக நான் தனியார் மருத்துவமனைச் சிகிச்சைக்காகச் செலவழித்தது. இரண்டுமே சில வருடங்கள் பழைய தரவுகள்.  மற்றபடி கட்டுரையின் கருப்பொருள் மாறவில்லை. இத்துடன் திருத்தப்பட்ட கட்டுரையை அனுப்புகிறேன். இதை ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.

 

பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51
அடுத்த கட்டுரைவெள்ளையானை – பலராம கிருஷ்ணன்