குமரகுருபரன் மறைந்து நான்காண்டுகள் ஆகின்றன. இந்த நான்காண்டுகளில் அவருடைய பெயர் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் மறைவு என்பது குறியீட்டளவிலேயே ஆழமானது. பெரும்பாலான கவிஞர்கள் முதுமையற்றவர்கள். முதுமையிலும் இளமையில் வாழ்பவர்கள். இளமையில் மறைந்த கவிஞன் தன் உடலையும் தன் கவிதைக்கு அடையாளமாக ஆக்கிவிட்டுச் சென்றுவிடுகிறான்
குமரகுருபரனுடனான என் உறவு சிக்கலானது. பலமுறை சொன்னதுபோல இரவில் ஒருவர் பகலில் பிறிதொருவர். பலவகையான ஒவ்வாமைகளால் அலைக்கழிக்கப்பட்டவர். அதை இரவில் வெளிப்படுத்தியவர். பலவகையான பெரும்பற்றுகளால் ஈர்க்கப்பட்டவர். அதை பகலில். என்னைப்போலவே அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்திருந்த திமுக தலைவர் மு.கருணாநிதியை இரவில் வசைபாடுவாரா என ஒருமுறை கேட்டேன். “அவருக்கு மிஞ்சித்தானே உங்களுக்கு” என்றார் குமரகுருபரனின் நண்பர்
இன்று பெயர்சொல்ல சில கவிதைகளை எஞ்சவிட்டுச் சென்றிருக்கிறார் குமரகுருபரன். அவற்றை இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்
அஞ்சலி, குமரகுருபரன்
குமரகுருபரன் -சில குறிப்புகள்
குமரகுருபரன் அஞ்சலி – செல்வேந்திரன்
குமரகுருபரன் கவிதைவிருது
வலியிலிருந்து தப்ப முடியாத தீவு
குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது
இறந்தவனின் இரவு
சென்னை கவிதை வெளியீட்டுவிழா
மீறல்களின் கனவு