நீதிக்கான சோதனை

இனிய ஜெயம்

வாரம் ஒரு முறை,செய்திகளை [தலைப்பு செய்திகளை மட்டும்] மேய்வது எனது வழக்கம். இந்த வாரம் நான் கண்ட சுவாரஸ்யமான, பொது ஊடகங்கள் பெரிதாக கவனம் செலுத்தாத, [ பிரான்சிஸ் க்ருபா, கொலை,மர்மம், திடுக்கிடும் செய்திகள், கூப்பாட்டில் ஒரு சதவீதம் கூட இதற்க்கு இல்லை] செய்தி இது.

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62981-no-one-has-won-the-district-justice-exam-in-first-section.html

தமிழகம் முழுதும், முப்பத்தி ஒன்று மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப, நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. [ சட்ட இயலில் குறைந்த பட்சம் ஏழு வருட அனுபவம் என்பது அடிப்படை தகுதியாம்] . அது கூட பரவாஇல்லை. தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழிக்கப் பெற்று அனைவருமே பூஜியத்துக்குக் கீழே ,மைனசில் மதிப்பெண் பெற்று தோற்றிருக்கிறார்கள் .

வினாத்தாள் கடினமாக அமைந்து விட்டமை என்பதே காரணம் என தேர்வு எழுதியவர்கள் தெரிவித்திருப்பதாக செய்தி சொல்கிறது.

ஒரு வேளை இந்திய நீதி அமைப்பு, சட்டம் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகளை கேட்டு விட்டார்களோ. அநியாயம் அல்லவா இது ?

கடலூர் சீனு

***

அன்புள்ள  சீனு

இது நெறிகளுக்கும் மரபுகளுக்கும் மாறானது. நீதிபதிகள் என்ன எழுதவேண்டும் என்பதை வக்கீல்கள்தானே சொல்லவேண்டும்? தேர்வறையில் இரு வக்கீல்கள் இருபக்கமும் விடைகளை சொல்லியிருந்தால் இரண்டில் ஒன்றை அவர்கள் எழுதியிருப்பார்கள். வக்கீல்களுக்கு உரிய முறையில் வக்கீல் குமாஸ்தாக்கள் எழுதிக் கொடுத்திருந்தால் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49
அடுத்த கட்டுரைதோப்பில் – கடிதங்கள்