துங்கா நதிக்கரை ஓரத்திலே

சில ராகங்களுக்கு ஒரு மலையாளத்தன்மை உண்டு. அவற்றை மலையாளத்தின் நாட்டார் பாடல்கள் மிகுதியாகப் பயன்படுத்துவதுதான் காரணமாக இருக்கலாம். இந்தப்பாடல் எனக்கு ஒரு மலையாளப்பாடலாகவே ஒலித்தது. பி.சுசீலா பாடி 2005 ல் வெளிவந்த அம்மன் இசைமலர்  என்ற தொகையின் எல்லா பாடல்களுமே பெரும்புகழ்பெற்றவை. பெரும்பாலும் செவிகளில் விழுந்துகொண்டே இருப்பவை. அவற்றில் இரு பாடல்கள் எனக்கு பிடித்தமானவை. இன்னொரு பாடல்  ‘தாய்வீடு சமயபுரம்’

இந்தப்பாடல்களின் இசை மரபானது. [இசை குன்னக்குடி வைத்யநாதன்] இசைக்கோப்பும் சாதாரணம். சுசீலாவின் குரலால்தான் இத்தனை கவர்கின்றன என்று தோன்றுகிறது.

https://mio.to/album/P.+Susheela/Amman+Isai+Malar+Devi+Navarathiri+%282005%29

முந்தைய கட்டுரைபிரபஞ்ச மௌனம்- கடிதம்
அடுத்த கட்டுரைதிருமாவளவன் ஒரு கடிதம்