ஜப்பான் பயணம்

இன்று [07-05-2019] மாலை நானும் அருண்மொழியும் ஜப்பான் கிளம்புகிறோம். அங்கே ஓர் இலக்கிய நிகழ்வு. கொஞ்சம் ஊர்சுற்றல். நண்பர் டோக்கியோ செந்தில் ஏற்பாடு. நேற்று காலையிலேயே ஊட்டியில் இருந்து நேரடியாக சென்னை வந்தோம். வளசரவாக்கத்தில் விடுதியில் தங்கினோம்.

பகல்முழுக்க வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். மாலையில் நண்பர்கள் வந்தனர். விமானநிலையத்திற்கு சௌந்தர், ராஜகோபாலன், காளிப்பிரசாத், சண்முகம், பழனி ஜோதி ஆகியோர் வந்து வழியனுப்பிவைத்தார்கள். கொலாலம்பூர் வழியாக டோக்கியோ..

ஜப்பானில் செர்ரிபிளாசம் பூக்கும் காலம் இது. நமக்கு பொன்கொன்றை போல அவர்களுக்கு செரிபிளாஸம். வசந்தத்தின் நிறம்

முந்தைய கட்டுரைகங்கைப்போர் முடிவு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-30