சோதிடம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

ஜோதிடத்தைப்பற்றிய உங்கள் குறிப்பைப்பற்றிபடித்தேன். அது ஒரு நழுவல் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.மனிதனுக்கு பலவகையான உள்ளுணர்வுகள் இருக்கலாம். ஒரு பெரிய உயிர்த்தொகுதியாக அவன் இருப்பதனால் அந்த மொத்த உயிர்த்தொகுதிக்கும் உரிய சில ஞானங்கள் அவனுக்கும் ஆழத்தில் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் எந்த உள்ளுணர்வைக்கொன்டும் அடுத்த கணத்தில் என்ன நடக்கும் எதிர்காலத்திலென்ன நடக்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது

முருகேசன்
[தமிழாக்கம்]

 

அன்புள்ள ஜெயமோகன்,

சோதிடத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தவற்றை ஏற்பது மிகவும் கஷ்டம். சோதிஅம் ஒரு அறிவியல் அல்ல. ஒரு கலை அல்ல. அப்படியானால் அது என்ன? ஒரு வகையான உத்தி. ஒரு விஷயத்தைச் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் அந்த விஷயத்தில் ஏதோ உண்மை இருக்கிறது என்று சொல்ல வைக்கும் தந்திரம். சோதிடம் உண்மை என்றால் மனித ஞானம் முழுக்கவே பொய் என்றுதான் அர்த்தம். சோதிடம் போதும் என்றால் கலை இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் எல்லா ஞானத்தையும் மூட்டைகட்டி வைக்கவேண்டியதுதான். ஆகவேதான் பாரதி சொன்னார் சோதிடம் தன்னை இகழ் என்று

முருகானந்தம் 

 

அன்புள்ள ஜெ,
 
சிறுவயதில், எனது தாத்தா ஊரில் பலருக்கு ஜோதிடம் பார்ப்பார். தாத்தாவிற்கு உதவி இருக்கிறேன். அவர் சில விதிமுறைகளை கடை பிடித்தார். பகல் நேரம் மட்டுமே பார்ப்பார். பூஜை முடித்த பின் தன் பார்ப்பார். பணம் ஏதும் வாங்க மாட்டார்.
 
அவரது நோக்கை இன்று திரும்பிபர்ர்க்கும் போது, ஜோதிடத்தை ஒரு எளிமையான உளவியல் ஆதரவாக, மன இருளுக்கு ஒளியாக பார்த்தார். வெறுமனே ஜாதகம் பார்ப்பதில் அவருக்கு ஒப்புதல் இல்லை. ஏதேனும் ஒரு தேவை இருக்க வேண்டுமென நினைத்தார்.  எனக்கு ஜாதக விதிமுறைகளை சொல்லிக் கொடுத்த பின் என்னை கேள்வி கேட்டு, பதில் எவ்வாறு சொல்ல வேண்டுமென பயிற்சி கொடுத்தார். அவ்வப் போது, வழிகாட்டிகளாக வாக்கியங்கள்.
 
எதிர்காலம் நாம் பயணம் செய்யாத ஊர் என்றும், மனித இனத்தில் பலர் இந்த ஊர்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்று எங்கள் தாத்தா கூறுவார். அவர்களது தொடர்பிய அறிவை, நமக்கு விளக்காக பயனுற செய்யலாம் என்று கூறுவார். சீன ஜோதிடம் (இ சிங், முதலியன), அமெரிக்க ஆஸ்திரேலிய கண்டங்களின் பழங்குடியனரின் கற்கள் என பல விதமான framework குகளை அறிமுக படுத்தினர்
 
உங்களது பார்வையை ஒப்புக் கொள்கிறேன். மனித உள்ளுணர்வின் ஆழம் பற்றி.
 
எனது அனுபவத்தில், ஜோதிடம் ஒரு எளிய உளவியல் ஆதரவென தோன்றும். பல தளங்களில் நிகழ்கிறது இந்த ஆதரவு.  நவீன உளவியல் practice இல் மனிதர்களின் அந்தரங்கங்கள் வெளிப்படுத்த பட்டு (இதில் எனக்கு ஆஷேபனை இல்லை, ஆனால் இந்த அந்தரங்க ஆவணங்களை எப்படி பாதுகாப்பது என்பதில் மிகவும் சிக்கலான விஷயம்)  அதன் மூலம் ஒரு ஆதரவு.
 
மனிதர்களை பற்றி எதுவும் தெரியாமல் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு ஒரு framwork ஜோதிடம். இதில் எல்லா பழங்குடி சமூகங்களும் முயற்சி செய்துள்ளது.
 
நவீன வாழ்க்கை நடப்பில், மனிதர்களின் நல்ல குணங்களை வார்த்தைகளாக கூற ஒரு நல்ல வாய்ப்பு. பல சமயம் சொல்ல வாய்ப்பு கிடைப்பதே இல்லை.
 
ஜோதிடத்தை அறிவியலாக பார்ப்பதில் பலவிதமான சிக்கல்கள் உள்ளது. எந்த விதமான முடிவிற்கும் வரமுடியாத நிலையது.
 
ஜோதிடம் மானுடத்திற்கு உளவியல் அளவில் பெரும் ஆதரவு தர வல்லது. பல விதமான தத்துவ சிக்கல்களையும் தழுவி காலத்தின் பரிமாணத்தை உணர்த்த வல்லது. சில தருணங்களில், எதிர் காலம் பற்றிய கணிப்பு முக்கியமல்ல எனவும்,  இயற்கை நிலை எதுவெனவும், இருளுக்கு ஒளியெனவும் விளக்கும்
 
அன்புடன் முரளி

ஆன்மீகம், சோதிடம், தியானம்

முந்தைய கட்டுரைகேரள வரலாறும் பெருமாள்களும்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் :கடிதங்கள்