வரும் மே மாதம் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட மற்றும் பிற நண்பர்கள் பத்துபேர் சென்னையில் இருந்து அங்கோர்வாட் செல்வதாக இருக்கிறோம். எங்களுடன் சிங்கப்பூர் ஜெர்மனி மலேசிய அமெரிக்க நண்பர்கள் ஐவர் இணைகிறார்கள். பாங்காக் போய் அங்கிருந்து நேராகக் கம்போடியா. மூன்றுநாட்கள் ஆங்கோர்வாட். இரண்டு நாட்கள் பக்கத்து ஊர்கள். இரண்டுநாள் தாய்லாந்து என்று திட்டம்.
அப்பகுதியில், குறிப்பாக கம்போடியாவில், இருக்கும் நண்பர்கள் ஏதாவது உதவி செய்ய முடிந்தால் தொடர்பு கொள்ளலாம். அந்த ஊரை இன்னமும் உள்ளே சென்று பார்ப்பதற்கு அது உதவலாம்