1000 மணிநேர வாசிப்பு சவால்
சுனீல் கிருஷ்ணன இப்பதிவைச் செய்திருந்தார்.
1000 hours of reading சவாலில் இதுவரை நால்வர் அரைசதம் கடந்து விட்டார்கள்! Suresh Pradheep 55 மணிநேரம் வாசித்து முன்னிலையில் இருக்கிறார். 55 மணிநேரம் வாசித்து Suja Chellappan இரண்டாம் இடத்தில் சில நிமிட வித்தியாசத்தில் தொடர்கிறார். சுந்தரவடிவேலனும் மாணிக்கமும் 52 மணிநேரங்களில் தொடர்கிறார்கள்.
என் எண்ணிக்கை 44.48 மணிநேரம்.
சந்தோஷ், ஜினுராஜ் ஆகியோர் நாற்பது மணிநேரங்களை கடந்துவிட்டார்கள்.வெண்பா, கவிதா, சாந்தமூர்த்தி, சிவமணின், சுசித்ரா, அருண்மொழி மற்றும் கமலதேவி 30 மணிநேர வாசிப்பை கடந்துவிட்டார்கள்.
அருண்மொழி இந்தப் போட்டியில் ஒரு கறுப்பு – சரி, மாநிறக்- குதிரை என தெரிந்தது. நான் வழக்கமாக ஊரில் இருப்பதில்லை. திரும்பிவந்தால் ஒரு மகிழ்ச்சி தெரியும். இப்போது, ‘இனிமே சமைக்கணுமே’ என்னும் சோர்வு தெரிவது ஏன் என புரிந்துகொண்டேன். நான் இல்லாத நாட்களில் கடையில் வாங்கிய பாக்கெட் சப்பாத்தியை வாட்டி சுருட்டி ஊறுகாய் தொட்டு சாப்பிட்டபடி இருந்த இடம் விட்டு எழாமல் வாசிப்பு. எடைகுறைப்புக்கு எடை குறைப்பும் ஆயிற்று
நடுவே ‘உடனே புள்ளைங்க வந்திரும். வெளிநாடெல்லாம் வேற போகணும். ஒண்ணுமே புரியலை. என்ன பண்றது? இந்த சுரேஷ்லாம் கண்டமானிக்கு வாசிக்கிறான் போல. அங்கெல்லாம் போஸ்டாபிஸ்ல ப்ரியா விட்டுடறாங்க” என புலம்பல். தஞ்சை தபால் துறை கண்காணிப்பாளருக்கு புகார் எழுதிவிடுவாளோ என்று ஐயம் வருமளவுக்கு.
பஷீர், தாகூர், சிவராம காரந்த், தல்ஸ்தோய் என அன்னிய முகங்கள் கண்ணில் பட்டன. வெண்முரசுக்கு வெளியே தமிழில் இவ்வளவு வாசிப்புக்கு இருப்பது பீதியளிக்கிறது
ஜெ