பொன்பரப்பி கண்டனக்கூட்டம் -உரை

நீங்கள் பேசியதின் காணொளி, இது நேற்று FBயில் நேரலையும் செய்யபட்டது.
நீங்கள் மிக சரியாகவே சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி இருக்குறீர்கள் என்று எண்ணுகிறேன்.
ராகவ்

இனிய ஜெயம்

கவிஞர் லட்சுமி மணிவண்ணன்  பொன்பரப்பி  சம்பவத்துக்கான கண்டனக் கூட்டத்தில் சக படைப்பாளிகளை இணைந்து கொள்ளச் சொல்லி, இணையத்தில் அறிவிப்புப் பத்திரிக்கை வெளியிட்ட அன்றே சமூக ஊடங்கங்களில்  காமடிக் கம்யுனிஸ்டுகள் தமது காமடி சர்ச்சைகளை துவங்கி விட்டார்கள்.

ஒரு படத்தில் சார்லி சாப்ளின் சுத்தியல் ஏந்திய கையை உயர்த்தி புரட்சிக் குரல் எழுப்புவார் .அவரையும் நம்பி ஒடுக்கப்பட்ட வர்க்கம் அவர் பின்னால் திரளும். அவர்களை வழிநடத்தி சாப்ளின் வீர நடை போட்டு முன்னே செல்லத் துவங்குவார். வீரம் கொப்பளிக்க கையை வீசி நடப்பார். வலது கை சுத்தியலால் தனது தலையில் தானே அறைந்துகொம்டு மயக்கம் போட்டு விழுந்து விடுவார். பாட்டாளி வர்க்கம் நடுத்தெருவில் முழித்துக்கொண்டு நிற்கும். இந்த சாப்ளின் போன்ற கம்யுனிஸ்ட்கள்  தமிழ்ச் சமூக வெளியெங்கும் உண்டு. இவர்களையே காமடி கம்யுனிஸ்ட் என்கிறேன்.

முதல் சர்ச்சை அழைப்பிதழின் முகப்பில் இருந்த தேவதேவன் கவிதை மீது [தலித் ஒப்பாரியும் இல்ல முற்போக்கு கூப்பாடும் இல்ல என்னய்யா கவிதை இது?]  தேவதேவன் அவர் வாழ்நாள் முழுக்க தலித் பிரச்னை குறித்து ஒற்றை வார்த்தையாவது எழுதி இருக்கிறாரா ? [கேட்டுப்புடோம்ல]

இரண்டாவது லட்சுமி மணிவண்ணன் ஜெயமோகன் கூட்டணியின் கருத்தியல் சதி மீது. அதாவது ஜெயமோகன் இந்துத்துவ கருத்தியல் பாசிஸ்ட். லட்சுமி மணிவண்ணன் பி ஜே பி ஆதரவாளர் இருவரும் இந்த பொன்பரப்பி சம்பவத்தின் பின்னாலுள்ள இந்துத்துவ மேலாதிக்க கீழ்மையை மறுத்து இதை வெறும் சாதி வெறுப்பு என குறுக்கப் பார்க்கிறார்கள்.

மூன்றாவது அழைப்பிதழில்  அம்பேத்கர் திடல் என்பதை தமிழர் திடல் என திரித்த சதி வேலை.

உண்மையாக இந்த காமடி கம்யுனிஸ்டுகள்  லட்சுமிமணிவண்ணன் முன்னெடுக்கும் சதியை முறியடிக்க வேண்டும் என்றால் சம்பள உயர்வு கணக்கு  தாண்டி வேறு எதற்காகவும் செய்தித்தாள் வாசிக்கத் தோன்றாத வெட்டி ஆபிசர்களை  வைத்துக் கொண்டு செயல்படுத்தும்  தமிழ்நாடு முற்போக்கு எ க சங்கம் கொண்டு முதலில் அவர்கள்தானே வீறு கொண்டு எழுந்திருக்க வேண்டும்.

சங்கம் பானை வனையும் வேலை செய்து கொண்டிருக்க இவர்கள் இணைய வெளியில் களமாடி இந்துத்துவ ஆதிக்க சதியை முறியடிக்கிரார்கலாமாம்.அதனால்தான் இவர்களை காமடி கம்யுனிஸ்ட் என்கிறேன்.

இதற்க்கு அடுத்த படியில் நிற்பவர்கள் ”வன்னிய” எழுத்தாளர்கள். பா மா கா வன்னிய எழுத்தாளர்களே ஒன்று கூடுங்கள் என்று கர்ஜித்தபோது அன்று அந்த மேடையில் அட்டண்டன்ஸ் போட்ட எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்று இந்த சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிர்ரார்கள் என்று இந்த காமடி கம்யுனிஸ்டுகள் கணக்கெடுப்பார்களா? அவர்களின் மௌனத்துக்குப் பின்னால் இப்படி இந்துத்துவ சதி ஏதேனும் இருந்தால் கட்டுடைப்பார்களா ?

ஒற்றை ஆதிக்க இந்துத்துவ எதிர்ப்பு அரங்கு ஒன்றை உருவாக்கி அதன் பின்னால் படைப்பாளிகள் திரள சில வருடங்கள் முன்பு லட்சுமி மணிவண்ணன் அழைப்பு விடுத்திருந்தார் .அன்று இந்த காமடி பீஸ்கள் எங்கே போயிருந்தார்கள்?

நல்லது அறத்தின் குரலுக்கு எதிர் நிற்க ஆன்மா செத்த மனசாட்சி செத்த அந்த இடத்தை அரசியல் வெறியாலும் அதிகார வெறியாலும் நிரப்பி வைத்திருக்கும்  குரல்கள்  எத்தனை எழுந்து வரும் அவை என்னென்ன பேசும் என்பதை நெருங்கி அறிய மற்றொரு தருணம் இது

கடலூர் சீனு

பிகு
தற்போதுதான் நீங்கள் பேசிய காணொளி கண்டேன். நீங்கள் எந்தக் குரலை கண்டித்தீர்களோ அந்தக் குரல்கள் மொத்தமும் அந்த காணொளி கமண்டில். அற்புதம் அற்புதம் :) வாய்ப்பு இருப்பின் உடனடியாக நீக்கச் சொல்லி கபிலன் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறேன்
முந்தைய கட்டுரைசென்னை கண்டனக்கூட்டத்தில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20