நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க
நீர் நெருப்பு – ஒரு பயணம்
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நாவறழத் தாகித்துத் துடிக்கும் இக்கோடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு நீர்சொட்டின் அருமையை உயிரேற்றி வருகிறோம். தண்ணீரை தந்துகொண்டேயிருக்கும் ஒரு ஆறு சாகக்கூடாது என்பதற்காக, ஒரு துறவி தன் ஊணைச்சுருக்கி உடலைக்கரைத்து உயிர் துறந்திருக்கிறார். நிகமானந்தா என்னும் பெயருடைய அத்துறவி இறந்த கணந்தொட்டு இன்றின் இக்கணம்வரை அடித்தடுத்து ஒவ்வொரு துறவிகளாக உண்ணாநோன்பு இருந்து வருகிறார்கள்.
தண்ணீருக்காக இன்னுயிரீந்த சாதுக்களின் வாழ்வுவரலாற்றையும் போராட்டப் பின்னணியையும் நமது நிஜமனதிற்கு எடுத்துச்சொல்லும் குறுநூல்தான் ஸ்டாலின் பாலுச்சாமி எழுதிய ‘நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு’. குழந்தைகளிடமும் பெண்களிடமும் இந்தத் தண்ணீர்மனிதர்களையும் அவர்தம் உயிரர்ப்பணிப்பிகளையும் கொண்டுசேர்க்கும் நன்நோக்கில், இப்புத்தகத்தை தொகையில்லாமல் அனுப்பிவைக்கிறோம். நீர்சார்ந்து ஒரு உரையாடலை எல்லா மட்டத்திலும் துவக்கிவைத்து இந்நூலின் ஆயுள்முடியட்டும்.
புத்தகம்பெற விரும்பும் தோழமைகள் முகவரியை அலைபேசி எண்ணுடன் தன்னறம் பதிப்புவெளியின் எண்ணிற்கு அனுப்பிவையுங்கள். சிலதினங்களில் அஞ்சல்வழியாக அனுப்பி புத்தகத்தை கைக்கிடைக்கச் செய்கிறோம்.
கூட்டுத்தொகையாக சாதுக்கள் தங்களை மரணப்படுத்திக் கொள்வதைத் தாண்டியும், நமதிதயத்தின் கருணையை அசைக்க வேறென்ன வேண்டும். எண்ணங்கள் குவிந்த நம் பிரார்த்தனைகள் உருவாக்கும் அகவலு, முன்னிகழா ஒரு செயலைச் சாதிக்கும்.
தன்னறம் நூல்வெளி
9843870059