அன்றைய முகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

பத்திரிக்கைகளின் கணிப்புகளை பின்னாளில் பார்ப்பது ஒருவிதமானது.இன்று மெய்யான ஒன்றை பற்றி, அன்றைய கணிப்பை பார்ப்பது என்பது சுவாரசியமானது.இது வெளிவந்த இந்தியாடுடே வில் உங்களாேடு சேர்த்து சிலஆளுமைகளை இந்தியா டுடே குறிப்பிட்டிருந்தது .அய்யாவின் புத்தங்களை குறைப்பதற்காக இதழ்களை பிரிக்கும் பாேது இதை எடுத்தேன்.உங்களின் நினைவில் …இதுவும்,இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலும் இருக்குமா என்று தெரியவில்லை.
அன்புடன்,
கமலதேவி

அன்புள்ள கமலதேவி

நன்றி. நெடுங்காலம் ஆகிவிட்டது இப்போது நினைக்கையில் அன்றிருந்த எழுச்சியும் கொந்தளிப்பும் நினைவுக்கு மிக மங்கலாகவே வருகின்றன. ஆனால் ஒன்று தெரிகிறது, என் அழகியல், இலட்சியவாதம் எதுவுமே பெரிதாக மாறிவிடவில்லை. கனவுகள் எல்லாமே அன்றே தொடங்கியவைதான்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26
அடுத்த கட்டுரைவசைகள் -கடிதங்கள்