அறம் வளர்த்த அம்மா

அறம் விக்கி

அன்புள்ள ஜெ…

வழக்கமாக உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து பேசும் நீங்கள் ஓர் உரையின்போது குரல் உடைந்து கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துனீர்கள்

கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்ளையும் பயன்படுத்தி தன் நச்சுக்கரங்களை எல்லா இடங்களிலும் நீட்டி , அனைத்து வழிகளும் கொள்ளை அடிக்கும் தலைவர்களை, ஊடக வாய்ப்புகளுக்காகவும் பொருளாதார பயன் கருதியும், மிகப்பெரிய ஆளுமைகளாக , இலக்கியவாதிகளாக, மாபெரும் தலைவர்களாக கட்டமைக்கும் ஊடகங்கள் நல்லோரை கண்டு கொள்வதில்லை என ஆழ் மன வேதனையோடு ஒரு மேடையில் குமுறினீர்கள்…

உங்கள் வேதனை நியாயமானதுதான்…

ஆனால் இன்னொன்று இருக்கிறது

ஊடகங்கள் அப்படி பொய்யாக ஒருவரை கட்டமைப்பதால் அவர்களுக்கு ஏதோ ஓர் ஆதாயம் கிடைக்கிறது.

ஆனால் அப்படி எந்த ஆதாயமும் பெற வாய்ப்பில்லாத இணையவாசிகள்கூட , அதே தலைவர்களை போற்றி எழுதுதல், அதே குப்பைகளை பகிர்தல் என வாழ்வதை எப்படி புரிந்து கொள்வது?

உண்மையிலேயே மக்கள் மீது அன்பு கொண்ட, சேவை ஆர்வம் கொண்ட் தலைவர்கள் ப்லர் உண்டு.. அவர்கள் சேவையின் பலனைத்தான் நாம் அனுபவிக்கிறோம்

உதாரணமாக காந்தியவாதிகள் டி எஸ் சவுந்திரம் , அவர் கணவர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரடியாக காந்தியுடன் பழகியவர்கள்…கல்வி , சாதி ஒழிப்பு , நீர் பாசனம் , பெண் விடுதலை என பல துறைகளில் பணியாற்றியவர்கள் இவர்கள்

இவர்களைப்பற்றி எல்லாம் எவ்வளவோ எழுதலாம்..  நீங்கள் இவர்களைப்பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள்… இலக்கிய கட்டுரைகளில்கூட இவர்களைப்பற்றிய குறிப்புகளை கொடுத்து இருக்கிறீர்கள்//

இன்னும் ஒரு சிலர் ஆங்காங்கு எழுதி இருக்கின்றனர்

மொத்தமாக பார்த்தால் , ஊழல் தலைவர்களைப்ப்பற்றி பேசுவதில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட இவர்கள் போன்ற நல்லவர்களைப் பற்றி அக்கறையற்ற சூழல்தான் இருக்கிறது.

ஊடகங்கள் தாம் பெறும் கூலிக்காக இபப்டி நடக்கின்றன என வைத்துக்கொண்டாலும் ஒரு சராசரி மனிதனும் இப்படி இருப்பதன் அபத்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அறம் வளர்த்த அம்மா – நூல் குறித்த என் பார்வை
http://www.pichaikaaran.com/2019/04/blog-post_13.html
முந்தைய கட்டுரைதுர்கனேவின் தந்தையும் தனயர்களும்
அடுத்த கட்டுரைச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்