அழகியல் விமர்சனமும் ஷோபா சக்தியும்.
ஷோபா சக்திக்கு…. லக்ஷ்மி மணிவண்ணன்
இலக்கியத்தில் மதிப்பீடுகளின் அவசியத்தை ஓர் எழுத்தாளர் உணராமல் இருக்கமுடியாது. ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் விதிகளும் சட்டகங்களும் தடைக்கற்கள். அந்த விதிகள் மார்க்ஸியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன தேசியம் சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அழகியல் அல்லது ரசனை சார்ந்து வைக்கப்பட்டாலென்ன அவைகள் மீறிச்செல்லப்பட வேண்டியவை. அதைத்தான் என் பதிவில் சொன்னேன். சுருக்கமாக “இலக்கியத்திற்கு விதிகள் இல்லை“.