அறிபுனை- விமர்சனப்போட்டி

அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகள்

ஒரு பெருந்திறப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

அறிவியல்சிறுகதைப் போட்டிக்கு வந்து இறுதித்தேர்வான 10 சிறுகதைகள் என் குறிப்புடன் அரூ இணைய இதழில் வெளிவந்துள்ளன. வழிவழியாக வெறும் தொழில்நுட்ப விந்தைகளை வேடிக்கையாக துப்பறியும் கதைகளில் கலப்பதையே அறிவியல்கதை என நம்பி வந்துள்ளோம். இக்கதைகள் அவ்வகையில் தமிழுக்குப் பெருந்திறப்பு. அடிப்படை வினாக்களை உசாவி கற்பனையுடன் மேலே செல்லும் கதைகள் மெய்யான அறிவியல்புனைவின் தகவுகளையும் அறைகூவல்களையும் நமக்குக் காட்டுகின்றன

இந்தப் பத்துக்கதைகளைப் பற்றி – அல்லது ஏதேனும் சிலவற்றைப் பற்றி – விமர்சனக்குறிப்பை எழுதி அனுப்புங்கள். அவை அரூ இதழில் வெளியாகும். இந்த தளத்திலும் அறிவிக்கப்படும். இது ஒரு போட்டி முதல் ஐந்து பரிசுகளைப் பெறுபவர்கள் கிழக்கு பதிப்பகத்திலிருந்து தலா ரூ 2000 மதிப்புள்ள நூல்களை வாங்கிக்கொள்ளலாம்

ஜெ

***

அவன்  தன்ராஜ் மணி

கடவுளும் கேண்டியும்    நகுல் வாசன்

கோதார்டின் குறிப்பேடு  கமலக்கண்ணன்

தியானி – கிபி 2500 அஜீக்

நிறமாலைமானி பெரு. விஷ்ணுகுமார்

பல்கலனும் யாம் அணிவோம்ரா.கிரிதரன்

ம் –கிரிதரன் கவிராஜா

மின்னெச்சம் –ரூபியா ரிஷி

மூக்குத் துறவு –கே. பாலமுருகன்

யாமத்தும் யானே உளேன் –சுசித்ரா

***

முந்தைய கட்டுரைவானோக்கி ஒரு கால் – கடிதம்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம்- கடிதங்கள்