சொல்வனம், இவ்விதழ்

ஓர் இதழ் அமைந்து வருவதில் பல்வேறு தற்செயல்களின் ஊடாட்டம் உண்டு. எத்தனை திட்டமிட்டாலும், எந்த அளவுக்கு உழைத்தாலும் ஏதோ ஒரு இதழ்தான் அந்த அளவுக்கு நிறைவாக அமையும். சொல்புதிதை நாங்கள் நடத்தியபோது வெங்கட் சாமிநாதன் அட்டை போட்டு வந்த ஒரு இதழ் அளவுக்கு எதுவுமே முழுமையை அடையவிலலை. அதில் இருந்த கதைகள் [அ.முத்துலிங்கம், இரா. முருகன்] மொழியாக்கம் [அன்னு புரூக்ஸ்] கட்டுரைகள் [சிந்து சரஸ்வதி நகரீகம்] எல்லாமே சிறப்பாக அமைந்திருந்தன.

இந்த இதழ் சொல்வனம் அப்படிப்பட்ட ஒரு முழுமையை அடைந்திருக்கிறது. இசைபற்றிய சிறப்பிதழ் என்று சொல்லலாம். சேதுபதி அருணாச்சலம் பீம்சேன் ஜோஷி பற்றி எழுதிய கட்டுரை லலிதா ராம் தட்சிணாமூர்த்திப்பிள்ளை பற்றி எழுதிய கட்டுரை, ராமச்சந்திர ஷர்மா கமகம் பற்றி எழுதிய கட்டுரை , கெ.வி மகாதேவன் பற்றி சுரேஷின் கட்டுரை, நதிகளைப்பற்றிய கிரிதரனின் கட்டுரை எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கின்றன. சுகா காதுகுத்து பற்றி எழுதிய கட்டுரை அவரது நல்ல கட்டுரைகளில் ஒன்று

வாழ்த்துக்கள். சிலசமயம் நமக்கே நாம் ‘பின்னிட்டேடா’
என்று சொல்லிக்கொள்ள தோன்றும். அதே மாதிரி தருணம்

முந்தைய கட்டுரைகூகிளில் தேட
அடுத்த கட்டுரைசிற்பங்கள் ஒரு வேண்டுகோள்