உலுத்தர்

தேவநேயப் பாவாணர்

பாவாணர் பற்றி இணையத்தில் எதையோ தேட இந்தப்பக்கம் கிடைத்தது. போகிற போக்கில் ஏதோ உறுத்தியது. மீண்டும் வாசித்தேன். உலுத்தர்கள் ஏன் பள்ளி நடத்தவேண்டும்?

அதனால் தாயைப் பெற்ற தந்தையார் குருபாதம் என்பவரின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது உதவியால் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஆம்பூர் மிசெளரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.

ஆகா என மூளை மின்னியது. லுத்தரன் மிஷன் என்பதன் தமிழாக்கம் உலுத்தரின் விடையூழியம். பரலோகத்திலிருந்து பாவாணர் மகிழ்ச்சி அடைந்திருப்பாரா? சந்தேகமாகவே இருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி
அடுத்த கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்