திராவிட இலக்கியம் – கடிதங்கள்

சாலை இளந்திரையன்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

அன்புள்ள ஜெ,

 

புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் வேளாள இலக்கியவாதிகள். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் பார்ப்பன எழுத்தாளர்கள். மொத்த நவீன இலக்கியமும் சாதிய எழுத்து – கி.ராஜநாராயணனின் வாயில் தன் சொற்களைப் புகுத்தித் திரித்து சமஸ் உருவாக்கும் சித்திரம் இது. [அதே பார்வையில் நாளை  அழகிரிசாமி ஆசாரி எழுத்தாளர். கிரா நாயக்கர் எழுத்தாளர்]

 

இதைக்கேட்டு நாம் கொதிக்கலாம். ஆனால் ஏறத்தாழ நூறாண்டுக்கால திராவிட இலக்கிய மரபில் அவர்கள் இலக்கியவாதிகளை  மதிப்பிட அவர்களின் சாதி தவிர வேறு எந்த அளவுகோலையாவது எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறார்களா? ஒருமுறையாவது அவர்கள் இலக்கியம் சார்ந்த, அறிவுசார்ந்த ஏதாவது பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? ஒரே ஒருமுறையாவது? இந்த தொண்டர்களைச் சொல்லவில்லை. அவர்களின் தலைவர்களும் அறிவுஜீவிகளும் வேறு எதையாவது கருத்தில்கொண்டிருக்கிறார்களா? அண்ணாத்துரை எழுதியிருக்கிறாரா? ஈவெரா எழுதியிருக்கிறாரா? பாரதி முதல் சுந்தர ராமசாமி வரை எவரை விமர்சிக்கவேண்டும் என்றாலும் அவர்கள் பேசுவது சாதி எனும் ஒரே விஷயத்தை மட்டும்தானே?

 

பிறகு ஏன் நாம் கொதிக்கவேண்டும்? அவர்களால் முடிந்தது, அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்

 

ஸ்ரீதர்

ந.சஞ்சீவி

அன்புள்ள ஜெ

 

புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரையிலான இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே சாதியப்பார்வை கொண்டது – இது ஒரு பெரிய ஊடகத்தில் ஒரு மூத்த தமிழ்படைப்பாளியை முன்வைத்து உருவாக்கப்படும் சித்திரம். ராஜ் கௌதமனின் பழைய கட்டுரையை வெட்டி ஒட்டி அதற்கு முட்டுக்கொடுக்கிறார்கள்

 

நியாயப்படி இதுவரை நவீனத் தமிழிலக்கியத்தின் பகுதியாக இருந்த அனைவரும் கொதித்திருக்கவேண்டும். கொதிப்பார்கள். ஆனால் வாய் திறக்கமாட்டார்கள். எங்கோ இருக்கும் அதிகாரங்களுக்கு எதிராக முகநூல் களமாடலாம் . கண்முன் இருக்கும் பிரசுர அதிகாரம் அதைக்காட்டிலும் பெரியது. அதன் கண்களுக்கு நாம் தெரியமாட்டோம், இது நம்மை வேவுபார்க்கும். அதை நம்மவர் நன்றாகவே அறிவார்கள்

 

சந்திரசேகர்

 

தேவநேயப் பாவாணர்

 

ஜெமோ,

 

உங்கள் கட்டுரையில் மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயர் இல்லை என்று ஒரு பூசல் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரை நீங்கள் ஏன் விட்டுவிட்டீர்கள் என அறிய ஆவல்

 

ராம்குமார்

 

அன்புள்ள ராம்குமார்,

 

கட்டுரையை படிப்பவர்களிடமே பேசமுடியும். அவருடைய பெயரும் நூலின் பெயரும் அதன்மீதான சுருக்கமான விமர்சனமும் அக்கட்டுரையில் தெளிவாக உள்ளன.

 

இங்கே பூசலிடுபவர்களில் பலர் ஸ்க்ரோல் செய்து பார்க்கும் அசடுகள். வாசிப்பு என்பது முற்றிலும் வேறுவகை. அந்தவழக்கமே இக்கும்பலுக்கு இல்லை

 

ஜெ

jan30

ஜெ எம்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும் மிக வலுவான கட்டுரை.  ஒரு ,முழுமையான, முன் முடிவுகள் இல்லாத,  விரிவான,  ஆய்வு சார்ந்த சான்றுகள் கொண்ட பதிவு. இனியும் கழகக் கண்மணிகள் திராவிட எழுத்துக்கள் இலக்கியம் தான் என்று கண் மூடித்தனமாகச் சாதித்துக் கொண்டுதானிருக்கும்.  மாயைகளும் மிகைப்படுத்தல்களுமே அவர்களின் இயங்கும் உலகின் முறைகள்.

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…ஆர். பாஸ்கருக்கு உங்கள் எதிர் வினை வாசித்தேன்.

“இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தவரும் எல்லா வலதுசாரி அரசியலுக்கும் எதிராக நிலைகொள்வதை விடுத்து இந்து வலதுசாரி அரசியலுக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைக்கூட ஆதரிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டமைதான் இந்து வலதுசாரி வெறிக்கு அடிப்படையான உணர்வுநிலைகளை உருவாக்குகிறது.”

மிகவும் உண்மை.

 

இதையே டிசம்பர் மாதம் இந்தியாவில் நான் சிலரிடம் சொல்லி செருப்படி வாங்காமல் வந்தது  என் நல்ல காலம்.

 

“உண்மையில் அது மண்குதிரை, பெருவெள்ளத்தை தாங்காது என்பது மறக்கப்படும். சொல்லப்போனால் மதவெறி அரசியலுடன் தேவைக்காக தயங்காமல் கைகோத்துக்கொள்ளும் தன்மை கொண்டது அது “ரொம்பவும் சரி.

 

ஆசானே, வெளியில் செல்லும் போது குண்டுகள் கத்திகள் துளைக்காத மார்புக் கவசம் மற்றும் தலைக் கவசம் அணிந்து செல்லவும்.

 

சிவா சக்திவேல்

 

 

 

 

சி.என் அண்ணாத்துரை

 

ஜெ ,

 

சோ ராமசாமி விட்ட இடத்தை இதழாளராக நிரப்ப (நிஜமாவே) தன் வாசகர்களால் ‘பணிக்கப்பட்ட’ சமஸ் எழுதிய பெருங்கனவுகளை படிக்கும்பொருட்டு ஹிந்து இணையதளத்தில் நெடுநாள் நுழைந்த போது ஒரு பிளாஷ்பேக் நினைவு. எனவே கொஞ்சம் பின்னோக்கி போய்ப்பார்த்தேன் , என்ன கண்டேன் ?

 

ஏப்ரல் 2017 ல் வாஞ்சிநாதன் பேரன் கொடுத்ததாக ஒரு பேட்டி ‘உருவாக்கப்படுகிறது’ அதாவது வாஞ்சி இறந்தபின் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கிறது, அவரை வெள்ளையரசு கைது செய்யாமல் இருக்க முத்துராமலிங்கத் தேவர் கூண்டுவண்டியில் வைத்து 3 மாதம் பயணித்து,கூட்டிக்கொண்டு சென்னையில் குடிவைத்து காத்தார் என வரலாறொன்று ‘சமைக்கப்படுகிறது’.

 

 

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article19496176.ece

 

 

பி ஏ கிருஷ்ணன் உட்பட பலர் வாஞ்சி இறந்தபோது தேவருக்கு வயது 3 என்பதையும் வாஞ்சிக்கு குழந்தை பிறந்து அவர் இருக்கும்காலத்திலேயே இறந்துவிட்டது என்பதையும் ஆதாரத்தோடு எழுதினர் ,

 

 

https://m.jeyamohan.in/101474#.XKjQG7dN0wA

 

 

ஊடக அறம் வேலைசெய்கிறது ,அடுத்தநாள் ஒரு குறிப்பு , வாஞ்சியின் மனைவியை காத்தவர் சின்னத்தேவர் அல்ல ,அவரது தந்தை பெரியதேவர் ,’ஆகா, தேவர்பிரானின் தந்தையும் தேசபக்தர்’ என்ற புளகாங்கிதக் குறிப்போடு ஒரு திருத்தம் , கூலியற நோக்கம் என்ன ?

 

 

ஸ்டாலின் ராஜாங்கம் https://thetimestamil.com/2017/08/17/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/

 

 

மீண்டும் வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாளின் தங்கை பேரனான எஸ்.ராமநாதன், ‘அவர்கள் திருமணமாகி ஒரு ஆண்டுகூட கணவருடன் வாழவில்லை. கணவரை இழந்த பிறகு திருவனந்தபுரத்தில் எங்கள் குடும்பத்தோடே இருந்தார். எங்கள் குடும்பம் சென்னைக்கு குடி பெயர்ந்தபோது அவரும் சென்னைக்கே வந்துவிட்டார்’ என்று ஆதாரத்திற்கு இறப்புச்சான்றையும் அனுப்புகிறார் தமிழ் ஹிந்துவுக்கு ,

 

 

இவ்வளவு மலைப்பான போராட்டதிற்கு பின்பு ஹிந்து ஆசிரியர் வருத்தம் தெரிவித்து ஒரு குறிப்பெழுதுகிறார்

 

‘பேட்டி விவரங்களை தீர விசாரித்து, சரிபார்த்த பின்பு வெளியிட்டிருக்க வேண்டும் என்ற விமர்சனத்தை ஏற்கிறோம். அத்துடன், தேவையற்ற சர்ச்சைகள் எழ காரணமாகிவிட்ட அந்தக் கட்டுரையை பிரசுரித்தமைக்கு வருந்துகிறோம்.

– ஆசிரியர்’

 

https://tamil.thehindu.com/tamilnadu/article19522884.ece

 

சரி , தவறு திருத்தப்படுவிட்டது ,சரிதானே ?

 

ஆனால் இன்று 6-4-2019 வரை அந்த வரலாறு’சமைக்கும்’ கட்டுரை அப்படியே இருக்கிறது ,நீக்கப்ப்டவில்லை,கட்டுரையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை , கீழே ஆசிரியர் வருத்தமும் இணைப்படவில்லை , வெற்றிகரமாக வரலாறு நிலைநிறுத்த பட்டது ,

 

மாற்றுவிக்கிபீடியா பக்கத்தில் குறிப்பு இணைக்கப்பட்டு விட்டது ,வாஞ்சிநாதன் என கூகுளில் தேடினால் இக்கட்டுரை முதல் பக்கத்தில் வந்தாயிற்று ,இனி இது அழிக்க முடியாத ஆதாரம் ,

 

இனி இதை மறுப்போர் எப்படி ‘எதிர்கொள்ளப்படுவர்’ என நாம் அறிவோம்தானே ?

 

அம்பேத்கர் எழுந்தற்கு எதிராக எப்படி ராமசாமி நாய்க்கரை பெரியாராக கூலிகொடுத்து கட்டமைக்கப்பட முடியும் என்ற சந்தேகத்திற்கு பதில்தான் வெறும் ஒரு வருடகாலத்தில் கூலியால் வரலாற்று நிகழ்வாக்கப்பட்ட “வாஞ்சி மனைவியை காத்த தேவர்”  கூகுளில் தேடலில் முதல்பக்கம் வந்த டிராக் ரெக்கார்ட்.

 

நிற்க , தமிழ் ஹிந்து நாளிதழில் எதைவேண்டுமானலும் கூலியரத்தால் சமைக்க இயலும் என ஒருசோற்றுப்பதம் பார்த்தபின் உங்கள் எல்லா அச்சங்களையும் அப்படியே ஏற்கிறேன் , நான்காம் கலைஞர் இன்பாவுக்கு ‘தெற்கில் உதித்த சந்திரன்’ நூல் முன்பதிவுக்கு ஆவலோடு காத்துள்ளேன் .

 

வாழ்க இதழியல் ,வளர்க கூலியறம்

 

அருணாச்சலம்

முந்தைய கட்டுரைஅறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்
அடுத்த கட்டுரைபாலாவின் கட்டுரைகள்