அன்புள்ள ஜெ,
போரும் அமைதியும், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ருஷ்ய படங்கள் ஆங்கில உதவித்தலைப்புகளுடன் (sub titles) இங்கே உள்ளது. பொறுமையாக தரவிறக்கிப் பார்க்கலாம். இங்கேயே இன்னும் சில சிறந்த ருஷ்ய படங்கள் உள்ளன (தஸ்தயேவ்ஸ்கியின் ‘இடியட்’, புஷ்கினின் ‘Ruslan and Lyudmila’ etc.,).
போரும் அமைதியும் 1960 களில் பிரம்மாண்டமான பொருட்செலவில் 7 ஆண்டுகளில் நான்கு பகுதிகளாக (கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஓடக்கூடிய) திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1969ஆம் வருடத்திய கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கார் விருது பெற்றது. படத்தில் 45 நிமிடங்கள் வரும் போரோடினோ யுத்தக்காட்சி 1,20,000 நடிகர்களைக் கொண்டு படம் பிடிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஒன்று. நான் மூல நாவலை வாசித்ததில்லை, நீங்கள் அடிக்கடி சிலாகித்து கூறுவதால் படம் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என்று எண்ணி பகிர்ந்து கொள்கிறேன்.
* Part 1 (1965) – Andrei Bolkonsky http://stagevu.com/video/nitngxxyihxx
* Part 2 (1965) – Natasha Rostova http://stagevu.com/video/dntmetesuexr
* Part 3 (1967) – 1812 http://stagevu.com/video/ykuekskjrvio
* Part 4 (1967) – Pierre Bezukhov http://stagevu.com/video/zbhchbvpcnkk
நன்றி,
பிரகாஷ், தென்கரை
ஜெ,
Black Swan என்றொரு படம் பார்த்தேன். http://www.foxsearchlight.com/blackswan/ உங்கள் லங்காதகனம் கதையை படமாகப் பார்த்ததைப் போன்ற ஒரு உணர்வு. நிச்சமாய் லங்காதகனம், Black Swan போன்றதொரு படமாய் உருமாற அத்தனை வாய்ப்புக்களும் உள்ள கதை. பார்ப்போம் அதுபோல் ஏதாவது நடக்கிறதா என்று.
மோகன்தாஸ்