மாணவர்கள் நடுவே ராஜா

அன்புள்ள ஜெ
நலமா? தினமும் படிக்கும் வெண்முரசு பற்றி எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.
எனக்கே சமாதானம் அளிக்காத – காரணங்கள். நிச்சயமாக தொகுத்து பகிர்ந்து கொள்கிறேன்.
கீழே இளையராஜா, ஐ ஐ டியில் சென்ற காணொளியின் சுட்டி.  நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம்.
அற்புதமாக இருந்தது. இளைஞர்களுடன் மாணவர்களுடன் அழகாக உரையாடுகிறார். மற்ற மொழிகளில் தனக்கு தெரிந்த அளவில் தயக்கமின்றி பேசுவது பாடுவது உற்சாகமாக இருந்தது. கொஞ்சம் விளையாடுகிறார். கொஞ்சம் தத்துவம் பேசுகிறார். நிறைய நகைச்சுவை (இளையராஜா பாணி). தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி. எல்லா மாணவர்கள் பேசும் போது, ஒரு அணுக்கமான நேசம் குரலில் கேட்கிறது.
இரைச்சல்கள்  இல்லாமல் பாரதத்தில்  இயல்பாக, மொழிகளை மைய மோதல்களாக கொள்ளாமல் உரையாடல்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு பாட்டிற்கும், இசை அமைப்பிற்கும், ஒரு கதை இருக்கிறது. அவர் ஆற்றிய பங்கு இருக்கிறது. வார்த்தைளில் விவரிக்கவொண்ணாத நட்பு அந்தச் சூழலில் இருந்ததாக உணர்ந்தேன்
கொஞ்சம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட கூட்ட உரையாடல்களின் குதூகலமும் தென்பட்டது.
இளைஞர்களை (தனிப்பட்ட அளவில்) ஈர்க்கும் தேசிய மனிதர்களில் மிக முக்கியமானவர் இளையராஜா ஒருவர் என தோன்றியது.
அன்புடன்
முரளி

https://youtu.be/hY3s5pzaLVs

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்