கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு
அன்புள்ள ஜெ,
கிரா கட்டுரை முழுக்க சொல்லும் கருத்தின் சாரமாக தலைப்பிடுவது என்பது அடிப்படை நெறி. அதை இதழாளர் புரிந்து கொண்டாரா இல்லை புரியாமல் தலைப்பிட்டாரா அல்லது cognitive dissonance ஆகி விட்டதா ? உங்கள் கட்டுரையின் ஒட்டு மொத்த வரிகளும் கலக குரலாய் ஒலிப்பது கழக குரல்களுக்கு தொண்டை கலகத்தை ஏற்படுத்துகிறது.
எழுத்தின் உறுதிப்படா தன்மையை இலக்கியவாதியை விட திராவிட முறுக்கு சுற்றும் ஆட்கள் செவ்வனே செய்வதால் வரும் குழப்பங்கள் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துபவை. நாம் 1000 பக்கம் படித்தாலும் war and peace முதல் பக்கத்தை மட்டும் படித்து விட்டு மொக்கை என்று சொல்லி விமர்சன மொழி மூலமே அதிர்ச்சியூட்டும் கூட்டமிருக்கிறது. “இது நல்லாவே இல்லை. உனக்கு பிடிச்சிருக்கு எனக்கு பிடிக்கலை ரெண்டுமே ஒண்ணு தான். இந்த காமக்கதைகள் பக்கத்தில வந்த கதை உலக தரம்ன்னு நான் சொல்வேன் நீ ஒத்துக்குவையா” வகை குரல்கள் உங்கள் கட்டுரைக்கு எதிர்குரலாக வருவது அவலம்.
இந்த கீழ்கண்ட பதிவை எழுதியவர் எனக்கு இலக்கியத்தை பற்றி பெரும் பீதியூட்டுகிறார்.
https://www.facebook.com/poovannan.ganapathy/posts/2365087146836398
நன்றி,
கிருஷ்ண துவைபாயனா
***
அன்புள்ள ஜெ,
கிரா பேட்டி பற்றியக் கட்டுரைப் படித்தேன். என் மனதில் உங்கள் மீதான மதிப்பு ஏன் ஒரு நாளும் குறைவதில்லை என்று சில நேரம் யோசிப்பதுண்டு. ( பேஸ்புக்கில் இருப்பதால் உங்கள் மீதான வசைகள், ஆதாரப்பூர்வமான/ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என நாள்தோறும் பல பார்த்த பின்பும்) இதோ பதில் என்று எனக்குச் சொல்லியதுபோல் இருந்தது கட்டுரை. நன்றி. வேறென்ன சொல்ல :)
அன்புடன்,
சங்கர்
***
அன்புள்ள ஜெ.,
எனக்கு உண்மையிலேயே ஒரு விஷயம் புரியவில்லை.. எதற்காக இதற்குப் போய் இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள் என்று. அவர்கள் இருவரின் இலக்கிய தகுதிக்கு அவர்களின் படைப்புகளே சான்று.. ஆயிரம் பேர் சேர்ந்து கூவினாலும் அவர்களின் எழுத்தில் இருப்பது இலக்கியமாகி விடாது..
எலிகளின் உலகில் எலிகளே தெய்வமாக இருக்கமுடியும்… அதுபோல சராசரிகளின் உலகில் அண்ணாத்துரையும் கருணாநிதியும் இலக்கியவாதிகளாக இருப்பதே பொருத்தமானது.
நன்றி
ரத்தன்
***
அன்புள்ள ஜெ
கருணாநிதி அண்ணாத்துரை இலக்கிய விவகாரத்தில் எனக்குப் புரிந்த சில உண்மைகள்.
1.பெரும்பாலான அரசியல்நிலைபாடுகள் சாதிச்சார்பு, சாதிக்காழ்ப்பு கொண்டவை. அரசியல் இரண்டாம்பட்சம். அரசியலை ஒட்டி இலக்கியநிலைபாடுகள் எடுக்கப்படுகின்றன.
2..இஸ்லாமியருக்கு இலக்கியம், அரசியல், கலை எல்லாமே அடிப்படையில் அவர்களின் மதத்தின்மேல் நின்றுகொண்டுதான். மதநிலைபாடுதான் முக்கியமானது. அதன் நலனே அடிப்படையானது.
- இலக்கியப்படைப்புக்களை உண்மையிலேயே வாசித்து, தனிப்பட்ட முறையில் தரத்தை உணராதவர்களிடம் என்ன பேசினாலும் பயனில்லை.
4 இலக்கியப்படைப்புக்களை வாழ்க்கையை வைத்து ரசனைபூர்வமாக வாசிக்காதவர்கள் எவ்வளவு வாசித்தாலும் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் அரசியல்தான் அவர்களுக்குக் கிடைக்கும்
சத்யமூர்த்தி
***