லான்ஸர் பாரக்

திரு ஜெ அவர்களுக்கு,
அலுவல் காரணமாக இந்த வாரம் சிகந்திராபாத் சென்று அதே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. இரயில் நிலையத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது. 18வது அட்சக்கோடில் சுதந்திரத்திற்கு முன்சிறுவன் சந்திரசேகரன் காவல் நிலையத்திற்கு எதிரில் மரத்தில் ஏற்றிய கொடி ஞாபகத்திற்கு வந்தது.
All-focus
அவர் சிறு வயதில் வசித்த லான்சர் பாரக், ஜெனரல் பஜார், மோன்டா மார்க்கெட், இரயில் நிலையம், ஹுசைன் சாகர் எரி, நிஜாம் காலேஜின் 2014ல் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து  அடையாளமே தெரியாமல் மாறி விட்டது எனக் கூறினார். கூடுதலாகத் தற்போது மெட்ரோ இரயில் பாதை லான்சர் பாரக்கை ஒட்டியே வந்து விட்டது.
1984ல் அவர் நேஷனல் புக் டிரஸ்ட்டிற்காகத் தொகுத்த புதிய தமிழ்ச்சிறு கதைத் தொகுப்பின் வழியே அவரைத் தெரிந்தாலும், தங்கள் வலைத்தளம் வழியேயும், நான் 12 வருடங்கள் பணியின் காரணமாக சிகந்திராபாதில் இருந்ததால் அவரை சென்னை செல்லும் போதெல்லாம் வேளச்சேரி இல்லத்தில் சந்தித்து வந்தேன்.
நான் வரைந்த அவருடைய சில கோட்டோவியங்களைப் பாராட்டினார். அவருடைய சென்னை பற்றிய சிறு நூலின் ஆங்கிலப் பதிப்பின் வெளியீட்டிற்கு அண்ணா சாலையிலுள்ள கன்னிமரா ஹோட்டலுக்கு அழைத்திருந்தார். அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.
அவர் இருந்தபோது சிகந்திராபாத் வரும் நாட்களில் மோன்டா மார்க்கெட்டிலிருக்கும் சோலாபூர்வாலா கடையில் சோனெ ஹல்வாவும், புல்லா ரெட்டி கடையில் காஜு பக்கோடாவும் வாங்கிக்கொடுப்பது வழக்கம். இந்த முறை அதற்கு அவசியமில்லாமல் ஆகிவிட்டது.
அன்புடன்
சேது வேலுமணி
சென்னை
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-4
அடுத்த கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து… சுரேஷ் பிரதீப்