இருளறிவு

lo

 

அன்புள்ள ஜெ

உங்கள் நேரத்தையும் மனதையும் வீணடிப்பதற்கு வருந்துகிறேன். நான் இந்து மெய்ஞான சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். அவ்வப்போது இவற்றை தேடி வாசிப்பவன். சமீபத்தில் ஜடாயு என்பவரது முகநூல்பக்கத்தில் இந்த விவாதத்தைப் பார்த்தேன். சட்டென்று மலக்குழியில் விழுந்து எழுந்த உணர்வு என்ன இது என்றே புரியவில்லை. கொஞ்சநேரம் தலையே சுற்றிவிட்டது.

இதை உங்களுக்கு அனுப்புவது ஒன்றை மட்டுமே தெரிந்துகொள்ளத்தான். இந்தவகையான ஞானத்தால் என்ன பயன்? இந்த கீழ்மையைச் சென்று அடைவதற்காகத்தான் படிக்கவேண்டுமா? இது இன்றைக்கு ஆரம்பித்ததா என்றுமே இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறதா? இதிலுள்ள பெயர்களெல்லாமே பயங்கரமாக இருக்கின்றன. இவர்களின் பண்பாட்டுநிலை இவ்வளவுதானா?

சக்திவேல்

 

***

Murugan Sivam ஞானிகளின் கண்களுக்கு
இறைவனின் படைப்புகளில்
எந்த பேதமும் தோன்றாது
போலும்.அனைத்திலும்
அழகையே காணும் உயர்ந்த மனநிலை

Subrahmanian Vaidyanathanஇலக்குமியின் மார்பகத்துக் குங்குமம் திருமாலின் உடலைச்
சிவப்பு நிறமாக்குகிறது. http://www.ibiblio.org/sripedia/oppiliappan/sva/v/index.html (1) KamalA-kucha-chUchuka-kumkumathO
niyathAruNithaathula nIlatanO !
KamalAyatha-lochana !LOkapthE !
Vijayee bhava ! VenkatasailapathE !Oh Lord of VenkatAchalam ! Oh Lord of the Universe ! Oh Lord with
long eyes reaching almost to Your ears and reminding us of the softeness
and beauty of lotus flower ! Oh Lord whose matchless dark hued body is
renderd red always with the vermillion (Kumkumam) marks from the front portions of the breasts of MahA Lakshmi ! Victory be always to Thee!(Comments): The Lord’s dark bluish body has a lasting redness due to the sambhandham with Sri MahA Lakshmi’s saffron and kumkumam paste
worn on Her breasts as beauty marks .The Lord’s body is thus visualized as ” KamalA kucha chUchuka kumkaumathO niyatha aruNitha athula neela Tanu”.
The anyOnyam of the divya dampathis is celebrated here . ThAyAr’s intimate sambhandham is hinted as the reason why the Lord of the Venkatam hills
will forgive our trspasses due to the intercession of our most benevolent Mother united with Him in an inseparable manner . AhalahillEn Paasuram of Swamy

Subrahmanian Vaidyanathan இதை ஹீனோபமா என்று கூறவில்லை நான்.

Jataayu B’luru Subrahmanian Vaidyanathan இந்த உபமானம் ஏற்கனவே சுப்பிரமணிய புஜங்கத்தில் எடுத்தாளப்பட்டது தானே…இதை விட கம்பீரமான, ஆன்மீகமான மொழியிலும் அது உள்ளதுபுஜங்கத்தில் எடுத்தாளப்பட்டது தானே…இதை விட கம்பீரமான, ஆன்மீகமான மொழியிலும் அது உள்ளது
Pulindesa kanya ghanaa bhoga thunga,
Sthanalingana aasaktha kasmeera ragam,
Namasyanyaham tharakare thavora,
Swa bakthavane sarvadhaa sanuragam. 11

Salutations to thee , Of slayer of Tharaka,
When in passionate embrace of the busts,
Of the daughter of the hunter,Which are very dense and high,
Your chest gets the red colour of the saffron,
And to your devotees dear to you,
It is the sign of your love to them.

Balaji M. Sharma குரங்கின் ப்ருஷ்டத்துக்காகவா இவ்வளவு பெரிய சிவ நிந்தனா வ்ருக்ஷம் !! OMG…

சர்வமங்களா ஸ்ரீயாழைபழித்த நன்மொழியம்மை குரங்கின் மயிரை வைத்து கூட அவன் சிவசக்தி நிந்தனை செய்வான்

Jayanth Ramakrishnan அற்புதம்

Subhash Kobla ஶ்ரீமத் ராமாயணத்திற்கு கோவிந்தராஜீயம், மஹேஶ்வர தீர்தீயம், திலகம், தனிஶ்லோகி, ஶிரோமணி என்று பல்வேறு வ்யாக்யானங்கள் உண்டு. அயோத்யாகாண்டத்தில் 16 ஆம் சர்கத்தில் 9 ஆம் ஸ்லோகத்திற்கு ஶிரோமணி வ்யாக்யானத்தைப் பாரும். வரம் இதி ஶ்ரேஷ்டம்; நஜஹாதி ப்ரயத்னம் அந்தரா அநுலேபன கர்த்ரூண் நத்யஜதி இதி அஹம் ; ருதிரா அருணா; ஆபாயஸ்தத் த்ரயாணாம் கர்மதாரய: | தேந | ஆக இந்த மூன்றின் கர்மதாரய ஸமாஸம் வர+அஹ+ருதிர ஆபேண என்று வருகிறது. சிறந்த அருணோதய காலைப்பொழுதில் காணும் சிவப்பு போன்ற என்று பொருள். இந்த சைவர்க்ள் பாவம். என் செய்வது சிவன் ஒரு தாமச கடவுளாகையால் அந்த புத்தி ,அவரை உபாசிக்கும் பக்தருக்கும் தொற்றுகிறது போலும். மகன் சீராளனை வெட்டிக் கொன்று அவனது தலைக்கறியை சமைத்து படையலாகத் தாருமென்று கேட்டவர் தானே. கண்ணப்பரின் இரு கண்களையும் தோண்டு எடுக்குமளவுக்கு சோதித்தவர் தானே.

Gowtham Kalidass பிறகு எதற்கு கோவிந்தராஜரின் பாஷ்யத்தை மேற்கோள் காட்டினாய்.ஆதிசங்கரர் என்ன கூறினார் என்று விளக்கிய பிறகும் உளறிக்கொண்டிருக்கிறாய்.

சிவன் தாமஸகடவுள் என்று வைஷ்ணவ வஹாபிக்களான கீழ்ஜன்மங்கள் தான் காலம் காலமாகக் கதறிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் வைதீகர்கள் யாரும் பாஞ்சராத்ர பாஷாண்டிகளின் கதறலைக் காதுகொடுத்துக்கூடக் கேட்கவில்லை. ஏன் நீ ஸத்வபுராணங்கள் என்று கூறும் பத்மம்,நாரதீயம்,வாராஹம் முதலான வைஷ்ணவ புராணங்களே சிவபரத்வம் கூறி,விஷ்ணு சிவபெருமானைப் பூஜித்தார் என்று கூறுகின்றன.

சிவபெருமான் தன் பக்தர்களை சோதித்தாலும் அவர்கள் புகழை உலகறியச் செய்தார்.உன் போன்ற நீசஜென்மங்களுக்கு அதன் தாத்பர்யம் எல்லாம் எங்கே புரியப்போகிறது.

அது சரி திருமால் ரிஷிபத்னியைக் கொன்று சாபம் பெற்றுத்தான் உலகில் பிறக்கிறாராமே.நான் சொல்லவில்லை வால்மீகி ராமாயணமும்,பத்மபுராணமும் தான் கூறுகின்றன.

Subhash Kobla Gowtham Kalidass இதுவரையில் உன்னை இலக்கியத்தால் அடித்தேன். இனி மருத்துவத்தில் அடிக்கிறேன். பொறுமை !!

Subhash Kobla Gowtham Kalidass தலைவரே ! வ்யாக்யானகளில் சிறந்ததை பயில வேண்டும். கோவிந்தராஜர் சிறந்த சந்தனத்தை வராஹருதிரம் என்றே சொன்னார். ஶிரோமணி அது பன்றி ரத்தம் அல்ல என்று மறுத்து விட்டது. இதற்கு என்ன பதில் ? அதைப் பற்றித்தான் பேச்ச் வேண்டும்.

Gowtham Kalidass ஆமாம் நீ அப்படியே கிழித்துவிட்டாய் பார்.மருத்துவத்தால் அடிக்கிறாராம்.சிரிப்பு காட்டாமல் ஏதாவது உருப்படியாகச் செய் போ.நீ என்ன கிழிக்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்.

Subhash Kobla Gowtham Kalidass பாஸ்டனில் வசிக்கிறேன். ஹார்வர்ட் பல்கலையில் மருத்துவ மாணவன். உன்னிடம் பாஸ்போர்ட் ஆவது உண்டா ………வெறும்.சிரிப்பு தான். குழாயடி சண்டை போடவே நீர் லாயக்கு

Gowtham Kalidass இங்கு கேள்வி கோவிந்தராஜர் தவறாகக் கூறினார் என்றால் எதற்காக அவரது பாஷ்யத்தை மேற்கோள் காட்டினாய் என்பது.மேலும் ஆதிசங்கரர் என்ன கூறினார் என்றும் விளக்கியாயிற்று.அது சரி மஹாதேவ என்பதற்கு சமுத்ரராஜன் என்று பொருள் கூறியவர்களாயிற்றே.அது மட்டும் ஏற்புடையதா.

Jagan Aps Subhash kobla ஜி எது எப்படி
ஆயினும் தங்களிடம் வித்யா கர்வமும் தற்பெ ருமையும் மிக அதிமாக தெரிகிறது நல்லதாக படவில்லை

Subhash Kobla இடக்கரடக்கல் வராஹருதிரேணாபத்துக்கும் சேர்த்து சொல்லி விட்டேன். சைவர்களுக்கு சாத்வீக புத்தியே கிடையாதா? ரத்தம், கொலை, வெட்டு, பன்றி, குரங்கு ப்ருஷ்டம்………சீச்சீ………..வெறி பிடித்த காட்டுவாசி……வாமசாரிகள்

Subhash Kobla Jagan Aps வித்யா கர்வம் இல்லை. சனாதன தர்மத்தினை காக்க போராடுகிறேன்.

Gowtham Kalidass மேலும் திலகமும் பன்றியின் உதிரம் என்று தான் கூறுகிறது.

Subhash Kobla Gowtham Kalidass ஶிரோமணிக்கு என்ன பதில் ? தைரியமிருந்தால் தேடு……….

Gowtham Kalidass Subhash Kobla அட பாஞ்சராத்ர பாஷாண்டியே.ஏன் ரத்தம், கொலை,வெட்டு,பன்றி இதெல்லாம் வைஷ்ணவ புராணங்களிலும் நூல்களிலும் இல்லையா.

Gowtham Kalidass ஸநாதன தர்மத்தினைக் காக்கப் போராடுபவன் அனைத்து மதங்களையும் அனுஸரித்து ஒற்றுமையை வளர்க்க வேண்டும். மிலேச்சர்களைப் போல பிற சமயத்தவரை கேவலமாக நிந்திக்கக் கூடாது. ஸநாதன தர்மத்தை இவர் காக்கிறாராம்.

Subhash Kobla Gowtham Kalidass அசுரர்களை கொல்லும் பொழுது ரத்தம் வராமலா ? டாக்டர்கள் அறுவை சிகிச்சையில் ரத்தம் இல்லையா ? உன் அகத்தில் தீட்டான சமயத்தில் பெண்களை ஆராதனம் செய்யவிடுவாயா ? ஓஹோ ! கக்கூசில் சென்றும் உணவருந்துபவனா நீ ?

Gowtham Kalidass Subhash Koblaகோவிந்தராஜீயத்திற்கும்,திலகத்திற்கும் என்ன பதில். முதலில் அதைக் கூறு.நீதானே கோவிந்தராஜீயம் மற்றும் திலகத்தைப் பற்றிக் கூறினாய்.உனக்கு ஸாதகமாக இருப்பதை மட்டும் உண்மை அல்லது சரி என்பாய் .

Subhash Kobla Gowtham Kalidass நான் பாஞ்சராத்ரன் அல்லன் வைகாநஸன். ஆனால் நீ ரத்தம், பன்றி, மாமிசம் உண்ணும் பறையன். சரியா !!

Gowtham Kalidass Subash kobla அட மூதேவி நான் க்ஷத்திரியன்.ஜாதியைக் கடுமையாக எதிர்ப்பவன்.எங்களது குலப்பட்டமே ராஜகுலத்தார் என்பதுதான்.வைகாஸநஸமும் அவைதிகம் தான் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.ஸாத்வதர்கள் பஞ்சமர்கள் என்று மனுதர்மம் கூறுகிறதே நீசனே.

Jagan Aps Subhash kobla இடக்கரடக்கல்நீங்கள் பின்பற்றுங்கள்வாதம் கீழ்த்தரமாக போகவேண்டாம் நன்றி

Subhash Kobla Gowtham Kalidass ஹா ஹா ஹா ……..வடமொழி தெரிந்தால் படிடா மூதேவி !

Gowtham Kalidass Jagan Aps கடவுளர்களையும்,பிறசமய ஆச்சார்யர்களையுமே மிலேச்சர்களைப் போலக் கீழ்த்தரமாக நிந்திப்பவன் இப்படித்தான் பேசுவான்.மரியாதை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது.

Subhash Kobla Gowtham Kalidass திருமாலை நிந்திப்பவனை செருப்பால் அடிப்பேன். கழுத்தையும் வெட்டுவேன்.

Gowtham Kalidass Subhash Kobla அட மூதேவி அதைத்தான் நானும் கூறுகிறேன். நீதான் வடமொழி மேதையாயிற்றே கோவிந்தராஜீயம் மற்றும் திலகம் இரண்டும் கூறுவதற்கு பதில் கூறடா.

Subhash Kobla நீயே படி

Gowtham Kalidass Subhash Kobla அட முண்டமே எங்கோ உட்கார்ந்து கொண்டு வீரவசனம் பேசுகிறாயே.வெட்கமாக இல்லை.எங்கள் பரமேஷ்வரரை நீ கீழ்த்தரமாக நிந்திக்கிறாயே எங்களுக்கு பெருங்கோபம் வராதா.காலம் காலமாக ராமநாதபுரம் ஸமஸ்தானத்தில் போர்களிலும்,நிர்வாகத்திலும் ஈடுபட்ட வம்ஸத்தில் வந்தவன் நான். என்னிடம் வாய்ச்சவடால் விடாதே.

Gowtham Kalidass அதான் மேலே நீயே கோவிந்தராஜீயத்தைக் கொடுத்துள்ளாயே.பிறகு என்ன.

Subhash Kobla Gowtham Kalidass என்னை ஒன்றும் சாதிக்காதவன் என்றாயே ? நான் அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கிறேன். நான் ப்ராஹ்மணன். உன்னை விட குலத்தாலும், வித்யையிலும் மேலானவன். நீதான் வீணே பாகவதம் பொய் என்றாய். திருமாலை பரமன் அல்ல் என்றாய். என் நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்காக உன்னோடு சண்டைக்கு வந்தேன். சாமர்த்யம் இருந்தால் வாதாடு. இல்லையேல் பொட்டியைக் கட்டுக் கொண்டு ஓடிவிடு

Gowtham Kalidass Subhash Kobla நீ அமெரிக்காவில் உட்கார்ந்துகொள் யார் வேண்டாமென்றார்கள்.ப்ராஹ்மணத்தன்மை குணத்தாலும்,செயல்களாலும் வருவது. பிறப்பால் அல்ல.நீ என்னைவிட வயதில் தான் மூத்தவன்.ஆனால் மெய்ஞானம் இல்லாத மூடன்.ஸநாதன தர்மத்தில் இருந்து கொண்டு ஸநாதன தர்மத்தின் தெய்வங்களையே கீழ்த்தரமாக நிந்திக்கும் நீ ப்ராஹ்மணன் என்று கூறிக்கொள்ளாதே.நீ மிலேச்சன்.ஆமாம் பாகவதம் பொய்தான்.உறுதியாகக் கூறுவேன். நான் திருமாலை என்றும் நிந்தித்தது கிடையாது. திருமால் பரமேஷ்வரரின் மற்றொரு வடிவம் என்றே கூறுவேன்.

Gowtham Kalidass எனக்கு ஸாமர்த்யம் உள்ளது. உன்னைவிடப் பெரிய வைஷ்ணவ வஹாபிக்களோடு விவாதங்கள் புரிந்தவன் நான். மாற்று மதத்தவர்களோடு விவாதம் புரிந்து பரமேஷ்வரரின் பெருமைகளோடு, விஷ்ணுவின் பெருமைகளையும் நிலைநாட்டியவன் நான். நான் வாதிடத் தயாராகவே உள்ளேன்.

Subhash Kobla Gowtham Kalidass ஶிரோமணி வ்யாக்யானத்துக்கு முதலில் பதில் சொல். துவங்கியது நீ தானே . ஏன் ஓடுகிறாய் ?

Gowtham Kalidass Subhash Kobla மூதேவி நீதானே துவங்கினாய்.நீதானே கோவிந்தராஜீயத்தை மேற்கோள் காட்டினாய்.நீதானே திலகம் பற்றிக் கூறினாய்.இப்போது ஏன் ஷிரோமணிக்குத் தாவுகிறாய்.நான் இங்கு தான் இருக்கிறேன். முதலில் நீ பதில் கூறு.

Subhash Kobla Gowtham Kalidass நீதான் பாகவத்ம் பொய் என்றாய். நான் கோவிந்தராஜீயத்தினை மறுக்கவில்லை. வராஹருதிரம் என்றால் பன்றியின் ரத்தம் என்று அவர் ஒப்பவில்லை. சிறந்த வாசனை மிக்க சந்தனம் என்றார். ஶிரோமணியில் அதற்கு தக்க விளக்கமும் உண்டு. வராஹரத்தத்திற்கு நான் பதிலளித்து விட்டேன். குரங்குப்ருஷ்டத்திற்கு என்ன பதில் ?

Subhash Kobla Gowtham Kalidass சைவ வஹாபியம திருமலையில் இருப்பது பரமஶிவன் தான் என்று வம்பு சண்டைக்கு வந்தது.சித்ரகூடத்தில் கண்வ மஹரிஷியின் தவத்தை மெச்சி பெருமாள் கிடந்த கோலத்தில் கோவிந்தராஜராக கோயில் கொண்டார். பின்னாளில் வந்து நாட்டியமாடியது ஶிவனார். அங்கிருந்த வந்தேறிகள் கோவிந்தராஜரை பெயர்த்து கடலில் எறிந்தார்கள்.
எங்கெல்லாம் பெருமாள் திருக்கோயில் உளதோ அங்கெல்லாம் போட்டியாக சிவன் கோயிலை நிர்மாணித்தார்கள். நவதிருப்பதி என்றால் நவகைலாஶம் ஸ்தாபித்தார்கள்.
கச்சபரை, நரசிம்மரை, வராஹரை, ராமரை, க்ருஷ்ணரை கேவலமாக அவமதித்தார்கள்.
சீர்காழியில் திருமங்கையாழ்வாரை வழிமறித்து போட்டிக்கிழுத்து தோற்றவன் தான் ஞானமில்லாத சம்பந்தன்.
12 ஆழ்வார்களுக்குப் போட்டியாக 63 நாயன்மார்கள் என்று எழுதிக் கொண்டார்கள். சீராளன் கதையும், கண்ணப்பன் கதையும் ரத்தவெறி பிடித்ததாகும்.வேதங்களில் திருமாலின் ப்ரத்வம் நிஷ்கர்ஷிக்கப்பட்டது கண்டு பொறாமை கொண்டு சிவபரத்வம் என்று வீண்சண்டைக்கு வந்தார்கள்.
ப்ரஹ்மசூத்ரத்தில் விஶிஷ்டாத்வைத பரமாக உரை எழுதினால், அதை காப்பியடித்து அப்படியே ஶிவவிஷிஷ்டாத்வைதமாக மாற்றியது நீலகண்டன் என்னும் வஹாபி தான்.

Gowtham Kalidass Subhash Kobla அட மூதேவி பொ.யு.5ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தில்லையில் சிவன் கோவில் இருக்கிறது என்பது வரலாற்று உண்மை.பொ.யு.840-850 வாக்கில் இரண்டாம் நந்திவர்மனின் துணையுடன் தில்லையில் கோவிந்தராஜரைப் ப்ரதிஷ்டை செய்து அதற்கு ஒரு போலி ஸ்தலபுராணத்தையும்…மேலும் பார்க்கவும்

Gowtham Kalidass சிவன் கோவில்கள் சங்ககாலத்துக்கு முன்பிருந்தே உள்ளன.போய் சங்க இலக்கியங்களைப் படி.1700 ஆண்டுகளுக்கு முன்பே பல நூறு சிவாலயங்கள் இருந்தன.

அடேய் மூதேவி ஸ்ரீ ஸ்ரீகண்டாச்சர்யர் எழுதிய ப்ரஹ்மஸூத்ர பாஷ்யம் பற்றியெல்லாம் பல ஆராய்ச்சி நூல்கள் உள்ளன.எதுவும் தெரியாமல் ஏனடா உளறித்திரிகிறாய்.அவர் எக்காலத்தில் வாழ்ந்தார் என்பதை வரலாற்று அறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.

Gowtham Kalidass வேதங்களில் சிவபரத்வம் ஏராளமாகக் கூறப்படுகிறதே.அடேய் மூதேவி நாயன்மார்களை பார்போற்றுகிறது.

Gowtham Kalidass பெரிய புராணத்தை அறிஞர்கள் போற்றுகின்றனர். உனது திவ்யஸூரிசரிதம் போன்ற கப்ஸாக் கதைகளை யார் போற்றுகின்றனர். நாயன்மார்கள் காலம் முதற்கொண்டு வரலாற்று ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளன.

Gowtham Kalidass வராஹருதிரம் என்பதற்கு பன்றியின் ரத்தம் என்று தானே கூறுகிறார். என்ன உளறுகிறாய்.நீ வைதீகர்கள் ஏற்றுக்கொண்ட சிவமஹாபுராணத்தை ஆதாரமின்றி பொய் என்றாயே மூடனே.நான் ஆதாரங்களோடு பாகவதம் பொய் என்கிறேன்.

Dev Raj வ்யக்தி தூஷணம் வேண்டாம். ப்ரமாணங்கள் மட்டும் போதும். ‘ஏரார் முயல் விட்டுக் காக்கைபின் போவதே’ இது நிஹீந உபமையா, இல்லையா? ஏன் சைவ – வைணவ பக்தி இலக்கியங்கள் இதை எடுத்தாள வேண்டும்?

Subhash Kobla ஐயா ! ஶிரோமணி வ்யாக்யானத்திற்கு பதில் வேண்டும். இவன் ஏதோ முன்னோர்கள் எழுதியதை படித்து இங்கு பிலிம் காட்டுகிறான். தனக்கு சுயமாக ஆசார்யபக்தியினால் எதுவுமே தோணவில்லை போலும். வராஹருதிரம் என்றால் அருணோதய வர்ணம் என்று ஶிரோமணி உரையின் படி பதில் சொல்லிவிட்டாயிற்று. இப்பொழுது “கப்யாஸம் புண்டரீகம்” என்னும் வரியில் இடக்கரடக்கல் ஏன் பயில்வில்லை என்று கேள்வி ? பதில் தேவை அடியேன் ! போதுமா ஸ்வாமின்

Subhash Kobla சுப்ரமண்யம் வைத்யநாதருக்கு போன் போடவேண்டுமா ? சுயபுத்தி/அறிவு வேலை செய்யாதோ ?

Nithya Mohan கௌதம் சகாே, கீழினும் கீழான ஜாதி பற்றும், அதீத மத வெறிக்கும் ஆட்பட்ட இந்த ஜந்துவிடம் வாதம் செய்வதில் அணுவளவும் பயனில்லை. என்ன ஓர் திமிர்?!பறையன் என்றெல்லாம் பொதுவில் பகிரும் இவர் சனாதன தர்மத்தை பேசுவது வேடிக்கை .”ஹரி ஜனங்கள்” என்றல்லவா வைதீகர்கள் விளம்ப வேண்டும்..இவரெல்லாம் உடையவர் புகழ் பாடுவது..அந்தாே பரிதாபம்.

Subhash Kobla ஹரிஜனம் தான் சரி ஹரஜனம் என்று பேய்கள் தான் உண்டு……..

Gowtham Kalidass அதை ஒரு மிலேச்சப் பிசாசு கூறுகிறது.ஹரியும் ஹரஜனம் தான் முண்டமே.

Subhash Kobla Gowtham Kalidass நீதாண்டா பன்றிரத்தம் ந்ல்லது என்னும் அப்ராமணன்.

Subhash Kobla Gowtham Kalidass பிறப்பால் தான் ப்ராஹ்மணத்வம் என்று கௌதம. ஆபஸ்தம்ப, மநு, ஆஶ்வமாயன க்ருஹ்யசூத்ரங்கள் சொல்கின்றன. புதிதாக சொல்லும் நீ , குணத்தாலே மட்டுமே ப்ராஹ்மணத்வம் என்னுன் நீ பறையன் வீட்டில் சம்பந்தம்வைத்துக் கொள். நான் மாட்டேன்.

Nithya Mohan நான் சொன்னது கீழான வார்த்தை பகர்ந்ததை சுட்டவே Subash kobla. நாங்கள் ஈசனார்க்கு ஆட்பட்ட அடிமைகள். பொய்ப் பிராச்சாரங்களை உன்னோடு நிறுத்திக் கொள்ளும்.

Gowtham Kalidass Subhash Kobla மூதேவி பகவத்கீதையில் க்ருஷ்ணரே கூறுகிறாரே.மஹாபாரதத்தில் ஷாந்திபர்வத்தில் பிறப்பால் ஜாதி இல்லை என்று ப்ருகுமஹரிஷி கூறுகிறாரே.அப்ராஹ்மணரான வால்மீகி ராமாயணம் எழுதினாரே.போதாயண ஸ்ரௌதஸூத்ரம் நாலவர்ணத்தாரும் யஜ்ஞம் செய்யவேண்டும் என்று கூறுகிறதே.மிலேச்சப் பதரே.நீ என்னவோ செய்.நான் அனைவரும் சமம் என்று கூறுபவன்.
Jataayu B’luru அருமை. வேறு ஒரு விவாதத்தில் நானும் இதைச் சுட்டிக்காட்டிய போது அங்கு இன்னொரு வைணவ வஹாபி சங்கரரை ஏகவசனத்தில் விளித்து என்னையும் நாயே பேயே என்று திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் மிகத்தெளிவாக சங்கரர் விளக்கியுள்ள ஒரு சாதாரண இலக்கண விவகாரத்தை வைத்து (தத்துவ விஷயம் கூட அல்ல) என்னவோ மாபாதகம் போல அதை மீண்டும் மீண்டும் பேசி சங்கரர் மீதான அபவாதத்தை இத்தனை நூற்றாண்டுகள் எப்படி பரப்பி வந்திருக்கிறார்கள் என்பது தான். ஒரு பக்கம் இது என்றால் இன்னொரு பக்கம் ஆதிசங்கரர் பரம வைணவர், அவர் ஷண்மத வழிபாடுகளை நிலை நிறுத்தவில்லை, சௌந்தரிய லஹரி எல்லாம் அவர் எழுதியதல்ல என்று இன்னொரு பிரசாரம். அங்கு அவர் ஏகவசனத்திலிருந்து சங்கர பகவத்பாதர் ஆகிவிடுவார்! ஏன் ஸ்ரீவைஷ்ணவ சிம்மங்களுக்கு இப்படி ஒரு இரட்டை வேடம், அடிப்படை நேர்மையின்மை? இப்படி ஒரு அற்பத்தனமான வெறி?

Gowtham Kalidass Jataayu B’luru‘ வைஷ்ணவானாம் யதா ஷம்பு:’ என்று கூறிக்கொண்டு அதே வாயால் சிவபெருமானைக் கீழ்த்தரமாக மிலேச்சர்களைப் போல நிந்திப்பதில்லையா இந்த வைஷ்ணவர்கள்.அதுபோலவே இதுவும். வேண்டும்போது பகவத்பாதர் வேண்டாமென்றால் ஏகவசனத்தில் கேவலமாக நிந்திப்பர்.ஆதிசங்கரர் பாஞ்சராத்ரத்தை “வேதநிந்தாமார்க்கம்” என்று கூறுகிறார். ஆனால் அவர் பாஞ்சராத்ரம் தன் மதம் என்று கூறியதாக உளறுகின்றனர்.அவர் விஷ்ணுவை மட்டுமே ஸகுணப்ரஹ்மம் என்று கூறினாராம். அவருக்கு ஊர்த்வபுண்ட்ரமே அணிவித்தாயிற்று.பிறகு அவரை ‘ப்ரசன்னபௌத்தர்,பௌத்தமதத்தை மறைமுகமாக போதித்தவர்,மெய்ஞானமில்லாதவர்,ஒரு அஸுரனின் அவதாரம்,etc,etc’,என்றும் நிந்திப்பர்.

Subrahmanian Vaidyanathan Gowtham Kalidass A new charge: Shankara upheld Vishnu, but ultimately he is naattigan. An Iyengar is saying.

Gowtham Kalidass Subrahmanian Vaidyanathan ஐயா இப்போது அந்த வைஷ்ணவ வஹாபி கோவிந்தராஜர் வராஹருதிரம் என்பதற்கு வராஹத்தின் ரக்தம் என்று பொருள் கூறவில்லை என்று எழுதியிருக்கிறான்.ஷிரோமணி சொல்வதே சரி என்று கூறி,பகவத்பாதர் வலிந்து குரங்குப்ருஷ்டம் என்று பொருள் கூறினார் என்று உளறியிருக்கிறான்.

Gowtham Kalidass அவர்களுக்கு ஆதிசங்கரர் மேல் கோபமும், வன்மமும் அதிகம் ஐயா.என்ன வேண்டுமானாலும் தங்களிஷ்டத்துக்கு உளறித்திரிவர்.

Subrahmanian Vaidyanathan Enna sonnaalum Sankararukku enrum kuraiyaada pugazhum mathippum muthal iDamum neengaadu. Poraamaiye kaaranam avargal avathoorukku.

Balaji M. Sharma Gowtham ஐயா. அந்த குரங்கு ப்ருஷ்டம் பண்ணற மாதிரியே பண்ணுங்கோண்ணா. ஆமாம் சாமி கமெண்ட் இல்லன்னா உடனே Unfriend, Block. கேடு கெட்ட Boston, கேடு கெட்ட Munich, இன்னும் போக நிறைய இடங்களை பார்த்தாச்சு. அதில் ஒண்ணும் இல்லை. புது பணக்காரர்கள் அர்த்த ராத்ரியிலும் குடை பிடிப்பா. மனஸில் இருப்பதோ வெரும் குப்பை. அவனுக்கு இருக்கற அளப்பரிய பெருமாள் பக்திக்கு bar chart போட்டா, 0.001 % பெருமாளும், 99.999 % குரங்கு ப்ருஷ்டமும் ஆக்ரமிச்சுண்டிருக்கு. இந்த அளவு சேர்ந்த குப்பைக்கு வைகுண்ட வாசனு(ம்) / வாசமும் கூட உதவப்போறதில்லை. நீங்க சிவனை புகழ்ந்து நிறைய பதிவுகள் போடுங்கோ. உங்களை சிவன் நல்ல நிலையில் வைப்பார்.

Natesan Muthukumaraswamy அறிவால் சிவனே எனக் கொண்டாடப்பெறும் ஆச்சாரியர் இந்த உவமையில் வழுகி விட்டாரோ எனும் ஐயம் எனக்குள் இருந்தது. ஜடாயு அவர்களின் பதிவு ஒன்றிலும் மறுமொழியாக இதனைக் குறிப்பிட்டிருவ்ததாக நினைவு.அலங்க்கார இலக்கணத்துக்கு வழுவின்றி இவ்வுவமை அமைந்துள்ளது என எடுத்துக்காட்டிய கௌதம் அவர்களுக்கு நன்றி.

 

 

அன்புள்ள சக்திவேல்

இது இன்று மிகமிகக்குறைவு. கிட்டத்தட்ட தலைமறைவாக நடந்துகொண்டிருக்கிறது. அழுகலில் புழுக்கள் என நெளிகிறார்கள். கடந்துசென்றுவிடுவதொன்றே நாம் செய்யக்கூடுவது.

இன்று மதம் என்பது வெறும் அடையாளம் மட்டுமே. அதற்கே இந்த ரகளை. கடந்தகாலத்தில் அது நேரடியாகவே அதிகாரம், பணம். அன்று இந்த வெறி உச்சகட்டத்தில் இருந்தது. இவர்களுக்குமேல் கொஞ்சம் தலைக்குள் காற்றோட்டம்கொண்ட அரசர்களும் அவர்களுக்கு நலம் சொல்ல ஞானிகளும் இருந்தமையால் வெட்டுப்பழி குத்துப்பழி இல்லாமல் இவர்களை வைத்திருந்தார்கள் என்று தோன்றுகிறது.

நடுவே இது திண்ணைகளில் ஒடுங்கியது. இப்போது உலகறியும் திண்ணையான இணையத்தில் நாற்றமடிக்கிறது. இன்று இதில் அரசியலதிகாரம் மீண்டும் ஒரு உட்பொருளாகியிருக்கிறது. ஆகவே மீண்டும் இந்த மூர்க்கம்.

மதத்தரப்புகள், தத்துவத் தரப்புகள் நடுவே சமரசமே இல்லாத விவாதம் என்றும் தேவையானது. அது இல்லாத மதமும் எங்குமில்லை. உறுதியான நம்பிக்கை மற்றும் முழுதேற்பு அத்தகைய விவாதங்களை உருவாக்குகிறது. அறிவியக்கம் எதுவானாலும்  அத்தகைய சமரசமில்லாத முரண்பாட்டுக்கு, விவாதத்திற்கு முதன்மையான இடமுண்டு.இலக்கியத்திலும்கூட.

அது கருத்துவிவாதமாகவெ நிகழவேண்டும். கருத்துப்பூசலாக ஆவதிலும் பெரிய பிழை இல்லை. மிக அரிதாகத் தனிநபர் தாக்குதலாகவும் ஆவதுண்டு. அது எல்லைமீறாமலிருக்கவும் அதை கடந்துசெல்லவும் அதில் ஈடுபடுபவர்கள் கற்றிருக்கவேண்டும். எவ்வகையிலும் உள்விவாதம் இல்லாமலாகிவிடக்கூடாது.

ஏனென்றால் அத்தகைய உள்விவாதம் வழியாகவே கூரிய கருத்துவேறுபாடுகள் எழுந்துவரும். கருத்துக்களின் நுட்பமான நிறமாலை எழுந்து வரும். புதிய எண்ணங்கள் உருவாகும். ஆகவே எங்கும் உள்விவாதத்தை மறுத்து மேலோட்டமான ஒற்றுமை பேசுபவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. குறிப்பாக என் செயல்தளமான இலக்கியத்தில்.

அதையும் இந்த விவாதத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இதிலுள்ளது அறிவுசார்ந்த பிடிவாதமும் மாற்றுத்தரப்பை மறுக்கும் வேகமும் அல்ல. மொண்ணையான பற்றும் அதிலிருந்து உருவாகும் கீழ்த்தரமான காழ்ப்பும் மட்டுமே.

இந்த விவாதம் வெறும் தகவல்சண்டை. பார்க்கப் பெரிதாகத் தோன்றும். ஆனால் ஒரு கார்மெக்கானிக்கு கார் பற்றி தெரிந்த அளவுக்கே இவர்களுக்கும் இதெல்லாம் தெரியும். ஒரு ஐந்தாண்டுகள் கற்றால் சேர்ந்துவிடும் தகவல்கள். அதை வைத்துக்கொண்டு இந்த ஆட்டம்.

சம்ஸ்கிருதச் சொற்பொருள் கொள்வதில் நிகழும் இந்தப்பூசல் ஆயிரமாண்டுகளாக அறுபடாது நீடிக்கிறது. இதே வசைகளுடன். இது அறிவல்ல. இந்தத் தகவல் சேர்ப்பும் அதைக்கொண்டு ஏளனமும் வசையுமாக ஆட்டம்போடுவதும் ஒரு குறிப்பிட்ட மனநிலை. இதற்கு ஒரு நீண்ட மரபு இவர்களிடம் உண்டு. கல்வி என்பது  முற்றிலும் வேறு. அது தெளிவுகளை நோக்கி செல்வது. அதற்கு முழுமையறிவு வேண்டும். குரு வேண்டும்.

இந்தக்கூச்சலில்கூட  ஒலிப்பது நான் நான் என்னும் சொல். மெய் என்ன என எவருக்கும் அக்கறை இல்லை. எவருக்கும் எந்த வகையான ஆசிரிய வழிகாட்டலும் இல்லை. இருப்பது வெறும் வெறி மட்டுமே. ஒரு நல்லாசிரியர் இருந்தால் “சரிதான் வாயைமூடு’ என இவர்களின் மண்டையில் குட்டியிருப்பார்.

எந்த வகையில் இவர்களிடம் பேச ஆரம்பித்தாலும் எங்கோ நம் ஆணவத்தை சீண்டிவிடுவார்கள். அதன்பின்னர் நாம் நம்மை அறியாமலேயே இவர்கள் விழுந்துகிடக்கும் இந்தச் சேற்றுக்குட்டைக்குள் சென்று சேர்ந்திருப்போம், இது  அறிவு அல்ல, அறிவின் சாயல்கொண்ட இருள்.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பது மதத்தைப் பற்றி அல்ல என்பதை ஓரிரு வரிகளை படித்தால் புரிந்துகொள்ளலாம். இவர்கள் எவரும் மதத்தை தெரிவுசெய்துகொண்டவர்கள் அல்ல. இவர்களின் பற்று சாதியில்தான். அச்சாதி எந்த மதத்துடன் இணைந்துள்ளதோ அதை மத அடையாளமாகவும் கொள்கிறார்கள். ஆகவே நான்கு சொற்றொடர்கள் பேசுவதற்குள் நேரடியாக சாதிக்கீழ்மை நுரைத்து வெளித்தள்ள ஆரம்பித்துவிடுகிறது.

இதில் எல்லாவகையான கயமைகளுக்கும் இடமுண்டு. இதில் ஒரு வைணவர் பேசுகிறார் பாருங்கள், அப்பட்டமான சாதிவெறி. ஆனால் அவர் தன் சாதிக்குரிய ஆசாரவாழ்க்கையையா மேற்கொண்டிருக்கிறார்? அவருடைய சாதிவெறி பிடித்த முன்னோர்களின் சொற்களைக் கொண்டுபார்த்தால் தீண்டத்தகாதவர் செய்யவேண்டிய தொழிலை செய்கிறார். இதில் பெருமைவேறு, ஹார்வார்டில் படிக்கிறேன் என்று. பணத்திற்கும் பதவிக்குமாக இப்படி எல்லாவகையான ஆசாரமீறலுக்கும் தயாராக உள்ள இவர்கள்  வெற்று ஆணவத்திற்காக சாதியடையாளம் சூடி அதை மத அடையாளமாக உருமாற்றிக் கொண்டு அக்கீழ்மையில் திளைக்கிறார்கள்.

இந்த கூட்டுக்கலவரம் நடுவே ஒர் ஊடுகுரல். வெறுப்பை நமக்குள்ளே கக்கவேண்டாம், சேர்ந்து மாற்றுமதம் மீது கக்குவோம், அதுவே நமக்கு ஒற்றுமையை அளிக்கும் என. வெறுப்பை கக்க ஆரம்பித்தால் அது கடைசியில் கண்ணாடி பார்த்து சொந்த முகத்தில் துப்புவது வரை கொண்டுசென்று சேர்க்கும்.

பேதஅறிவு என ஒன்று உண்டு. துண்டுபட்ட அறிவு, முழுமைநோக்கிய பயணம் இல்லாத அறிவு. அது வெற்று ஆணவத்தை மட்டுமே வளர்க்கும். கீழ்மையில் ஆழ்த்தி வைக்கும். எந்தவகையிலும் விடுதலை செய்யாது. சொல்லப்போனால் இந்தப் புவியில் மிகப்பெரிய தளை என்பது அதுதான்.முற்றாக விலகிவிடுங்கள். கவனிக்காதீர்கள். உள்ளத்தாலும் எதிர்வினையாற்றாதீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைஅனோஜன்,ஷோபா – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைமறைக்கப்பட்ட பக்கங்கள்