இந்த கும்பமுனி முற்றிலும் புதிய மனிதர். சாலாச்சிக்கும் சுசீலாவுக்கும் இடையே ஒரு சரடு. சாலாச்சிக்கும் ‘என்பிலதனை வெயில்காயும்’ நாவலில் வில்வண்டியில் கல்லூரி வருபவளுக்கும் நடுவே இன்னொரு சரடு. ஒரு தறி போல நெய்யப்பட்ட கதை. கற்பனைதான். ஆனால் கற்பனை என்பதுதான் என்ன?