கடிதங்கள்

அன்பிற்கினிய சார்

புதிதாக தொடங்கப்பட்ட தமிழகம்டைம்ஸ்.காம் உங்களுடைய மேலான ஆதரவைத் தேடி கணினி வழியாக வந்து கொண்டிருகிறது.
பல்வேறுபட்ட மாறுபட்ட கருத்துக்களுக்கும் வேறுபட்ட கோணங்களில்….

இலக்கியம், சமூக அரசியல் கலை அனைத்து வடிவங்களும் வரவேற்கப்படுகின்றது…

வாருங்கள்…
tamilagamtimes.com


Kannan KK

அன்புள்ள கண்ணன்

வாழ்த்துக்கள்

————–

அன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்கள் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருகிறேன். எனக்கு ஒரு சந்தேகம் “ஏன் குமரி மாவட்டத்தை சேர்ந்த இந்துக்கள் இறந்த சடலத்தை எரிக்காமல் புதைக்கிறார்கள்?

நன்றி,
ஜேகப்

அன்புள்ள ஜேகப்

இந்துக்களுக்கு இறந்தபின் உள்ள ஆசாரங்கள் எங்கும் ஒன்றல்ல. புதைப்பதும் எரிப்பதும் இரண்டுமே நடைமுறையில் உள்ளன.

பொதுவாக புதைப்பது ஒரு தெற்கத்தி தொல்மரபு. சமண பௌத்த மதங்களும் அதையே சொல்கின்றன. தொல்மரபில் இருந்து விடுபடாத சாதிகள், சமணா பௌத்த மதங்களில் இருந்து மீண்டும் இந்துக்களானவர்கள், புதைக்கிறார்கள். இந்து பூசாரி சாதிகளில் பண்டாரம் போன்ற சாதிகள் புதைக்கக்கூடியவர்கள்.

எரிப்பவர்களிலேயே கூட யோகிகளையும், துறவிகளையும் எரிப்பதில்லை. புதைக்கிறார்கள்.

ஜெ

===========================

“ஆனால் எந்த நல்ல ஆக்கமும் புரியாதநிலையிலேயே நம்மை உள்ளேயும் இழுக்கும்”

அவ்வப்போது நீங்கள் எழுதும் மனதைச் சுண்டி விடும் வரிகளில் ஒன்று. சமீபத்தில் war and peace படிக்கும்தோறும் இதை உணர்கிறேன்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

அது என் வரி அல்ல. சுந்தர ராமசாமி ஜே ஜே சிலகுறிப்புகளில் எழுதியது. பாலு சொல்கிறான்

ஜெ

———————————

ரொம்ப நாளா இருக்கற சந்தேகம். லாரல் அண்ட் ஹார்டி, டெரன்ஸ் ஹில் அண்ட் பட் ஸ்பென்சர், டாம் அண்ட் ஜெர்ரி காமெடியின் தமிழ் வடிவமே கவுண்டமணி செந்திலும், வடிவேலும் (செந்திலுக்குப் பதிலா ஒரு குரூப்) என்பது எண்ணம். இதன் உளவியல் என்னவாக இருக்கும்? (நேற்றிரவு நானே சமைத்த கோழியை உண்டதன் விளைவா என்று தெரியவில்லை J

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

அந்த வடிவம் எப்போதுமே உள்ளது. கீழை கலைகளில் உள்ள நிரந்தர கதாபாத்திரங்கள் கவுண்டமணிசெந்தில்.

தோல்பாவைக்கூத்தில் அவர்கள் உச்சிக்குடும்ப,ன் உளுவத்தலையன் என்ற பேரில் வருகிறார்கள். ஜப்பானிய தோல்பாவைக்கூத்திலும் உண்டு. அதில் இருந்தே குரஸோவா அவரது ஹிட்டன் ஃபோர்ட்ரெஸ் படத்திலும் எடுத்துக் கையாண்டிருப்பார்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

மீண்டும் ‘நான்காவது கொலை’ உங்கள் தளத்தில் உலா வருவது கண்டு மகிழ்ந்தேன். இதை நூலாக வெளியிடும் எண்ணம் இல்லையா?

‘திண்ணை’ யில் இத் தொடர் தொடங்குவதற்குமுன் நான் ‘துப்பறியும் சாம்பு’ பற்றி ஒரு வெண்பாவை அங்கு
எழுதினேன்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30207286&format=html

பின்பு உங்களுடன் இத்தொடரைப் பற்றிச் சில கடிதங்கள் பறிமாறிக் கொண்டது இப்போது நினைவிற்கு வருகிறது. ( உங்கள் தொடரில் சி.ஐ.டி சந்துருவும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்! இப்போது கூடச்
சேர்க்கலாமே? :-))

தமிழ்த் துப்பறியும் கதைகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அண்மையில் ஒரு த்ரில்லர் வகை நாவல் ஒன்றை நீங்கள் எழுதினதாகக் கேள்விபட்டேன். எப்போது ஒரு துப்பறியும் புதினம் ( கேலி அல்ல!) எழுதப்
போகிறீர்கள்?

அன்புள்ள

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam
http://s-pasupathy.blogspot.com/

அன்புள்ள பசுபதி

நினைவிருக்கிறது

உலோகம் ஒரு திரில்லர் நாவல். ஆனால் திரில்லுக்கு மட்டுமான நாவல் அல்ல. அந்த கருவுக்கு அந்த வடிவம் தேவைப்பட்டது. அது மனிதன் கிரிமினலாக ஆகும் பரிணாமத்தைப்பற்றியது

துப்பறியும்நாவல்தானே, எழுதலாம்தான்

ஜெ

முந்தைய கட்டுரையானை டாக்டர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரையானைடாக்டர்- கடிதங்கள் மேலும்