யானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை

anojanஅனோஜன் பாலகிருஷ்ணனின் புதிய சிறுகதை. ஐயமில்லாமல் ஈழச்சிறுகதைப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என நினைக்கிறேன். ஈழச்சிறுகதை இது வரை சென்றடைந்த தளங்கள் முதன்மையாக நுண்சித்தரிப்பு [அ. முத்துலிங்கம்] பகடி [ஷோபா சக்தி] மற்றும் யதார்த்தச் சித்தரிப்புகள் மட்டுமே. அவை இலக்கியத்தின் வகைமைகள் எனினும் தங்களுக்கான எல்லைகளும் கொண்டவை. நுண்சித்தரிப்புகள் முழுமையை இலக்காக்க இயலாது, அவை வளர்ச்சிபோக்கு அற்றவை. பகடி மிகமிக எல்லைக்குட்பட்ட கலைவடிவம். பகடி ஒருபோதும் அந்த ஆசிரியனின் குரலாக அன்றி, அந்தக் காலகட்டத்தின் ஒரு பகுதியாக அன்றி நிலைகொள்ள முடியாதது. இலக்கியத்தின் உச்ச இலக்கு என்பது கவித்துவமும் தரிசனமும்தான்.  அது நிகழ்ந்துள்ள அரிய படைப்புகளில் ஒன்று இது.

ஓர் இலக்கியப்படைப்பாக இதற்கு சில அழகியல் போதாமைகளைச் சொல்வேன்.  மொழியில், யானையை உருவகப்படுத்தியிருப்பதில். ஆனால் கதைமுழுக்க யானை பொருள்மயக்கம் கொள்வது,  யானை அகமாகவும் வரலாறு புறமாகவும் அமையும் பின்னல், உடனே யானை வரலாறாக ஆகும் ஜாலம்  என ஓர் அழகியல் வெற்றி இக்கதை.

http://tamizhini.co.in/2019/03/18/யானை-அனோஜன்-பாலகிருஷ்ணன/