உச்சவழுவும் பிழையும்

uchchavazhu_FrontImage_101

உச்சவழு வாங்க

ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க

ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க

அன்பின் ஜெ,

நேற்று தங்களின் தளத்தில் “உச்சவழு” சிறுகதையை படிக்க நேர்ந்தது. என் வாசிப்பாக நான் கண்டுகொண்டவை இவை. அவனது அன்னை ஒரு கருஞ்சுழி. அனைத்தையும் வாரி தன்னுள் இழுத்துக்கொள்ளும் கருஞ்சுழி. ஆனால் அச்சுழி தன் மகனை மட்டும் விட்டுவைத்துவிட்டது.

முதலில் அவளைக் காணாமல் இவன் மறுத்துவிடுகிறான். அவன் மீண்டும் தன் அன்னையை இவ்வாறு அடைகிறான். கடைசியில் தந்தத்தை நீட்டி தரையை நுகரும் அந்த யானை துதிக்கையின் சுழிவு தான் அந்த கருஞ்சுழி. அது அவனை வாரி எடுத்துக்கொள்ள விழைகிறது. அதை உணர்ந்து அவன் தன்னை கைவிடுகிறான். தன் தாயை அடைகிறான். அவனால் ஏற்பட்ட உச்சவழுவிற்கு பரிகாரம் தேடிக்கொள்கிறான்.

நன்றி,
லோகேஷ் ரகுராமன்.

siru

அன்புள்ள ஜெ

அழுத்தமான கதையம்சமோ பெரிய உணர்ச்சிகளோ இல்லாத கதை உச்சவழு. ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி சொல்லி அந்தக்கதையைச் சென்று அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால் அழுத்தமான பாதிப்பை உருவாக்கிய கதை அது. ஏன் என்று எண்ணிப்பார்த்தால் தெரிகிறது, அதிலுள்ள உண்மைத்தன்மைதான் என. அது பலமுறை உங்கள் கதையில் வந்துள்ளது. காடு நாவலிலும் உள்ளது. அந்த வாழ்க்கைச் சந்தர்ப்பம். அது உங்கள் சொந்த வாழ்க்கையாகக்கூட இருக்கலாம். எனக்கும் அப்படிப்பட்ட ஓர் அனுபவம் உண்டு

கே.முருகேஷ்

sirru

அன்புள்ள ஜெ

பிழை என் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையை நானே கண்டுகொண்ட கதை. பிழை என்பது விதி. அதன் வழியாகவே கடவுள் செயல்படுகிறார். 1987ல் செய்த ஒரு பிழை, ஒரு கைத்தவறு, என் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. பல துன்பங்கள். ஆனால் இன்றைக்கு நான் இருக்கும் நிலைக்கு அதுதான் காரணம்.

பிழை கதை உங்கள் ஃபேவரைட் தீம் என நினைக்கிறேன். முன்பு காலச்சுவடில்கூட ஒரு கதை எழுதியிருந்ந்தீர்கள். அந்தக் கதை ஜெயமோகன் சிறுகதைகள் தொகுதியிலே இருக்கிறது. ஒரு புழுவை எறும்புகள் இழுத்துச்செல்லும். அவை ஓர் இயந்திரத்தை ஓடவிடாமல் ஆக்கி அந்த ஆளுக்கே வேலையை இல்லாமல் ஆக்கிவிடும்

திருநாவுக்கரசு சுப்ரமணியம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86
அடுத்த கட்டுரைஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி