காந்தியும் காமமும் – 1
காந்தியும் காமமும் – 2
காந்தியும் காமமும் – 3
காந்தியும் காமமும் – 4
டியர் ஜெ.மோ,
வணக்கம்.
காந்தி பற்றிய உங்கள் கடிதங்கள் வாசகர் கடிதங்கள் பகுதியைபார்வையிட்டேன். மணிலால் ஒரு பெண்ணை முத்தமிட்டதற்காக உண்ணா னோம்பிருக்கும் காந்தி தன் வாழ்க்கையில் ஒரு பெண்ணை தன் “ஆன்மீக மனைவி ” என்று கொண்டாடினார்.அவர்களுக்கான கடிதங்கள் வாசிக்க கிடைக்கின்றன.காந்தியை இந்த இடத்தில் புரிந்து கொள்வது சிக்கலாகவே இருக்கிறது.
கஸ்தூரிபா காந்தியைப் பற்றியும் இந்த உறவு பற்றியும் என்ன மாதிரியான அபிப்பிராயத்தை வைத்திருந்தார் என்பதும் காந்தியை அதன் பின் அவர் எப்படி அணுகினார் என்பதும் தெரியவில்லை. அதாவது வழக்கம் போல எவருக்கும் அது பிரச்சனையாக இருப்பதில்லையோ என்னவோ.
உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்களுக்கு எழுதும் கடிதங்கள் வாசிக்கப்படுகிறதா என்று சந்தேகமும் வருகிறது.ஆனாலும் எழுதத் தோன்றியது. .
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை.
அன்புள்ள புதியமாதவி
நலம்தானே?
காந்தியே இந்த உறவு பற்றி சத்தியசோதனையில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். பின்னர் விரிவாக பேசியிருக்கிறார். காந்தியைப்பற்றி எழுதிய காந்திய வரலாற்றாய்வாளர்களும் பேசியிருக்கிறார்கள். நான் இன்றைய காந்தி நூலில் விரிவாக பேசியிருக்கிறேன். அந்தக் கட்டுரை காந்தியும் காமமும் என்னும் தலைப்பில் என் தளத்திலேயே உள்ளது.அந்த பெண்மணியின் பெயர் சரளாராணி சௌதராணி. அவருடைய படமும் அந்நூலில் உள்ளது.
ஒரு உபரிச் செய்தி, இவ்வாறு சரளாராணி சௌதராணியின் படத்துடன் அதை விவாதித்ததை சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்து அது இந்துத்துவ நோக்கில் காந்தியை இழிவுசெய்யும் முயற்சி என்று எழுதியிருந்தார்.
சரளா ராணி ஓர் அறிவாளர். விடுதலைப்போரில் ஈடுபட்டவர். அவருக்கும் காந்திக்குமான உறவு அவரும் அந்த அம்மையாரும் வெளிப்படுத்திக் கொண்டபடி முற்றிலும் காமம் சாராதது, அறிவார்ந்தது. மிகக்குறுகிய காலமே அது நீடித்தது. [எல்லா அறிவார்ந்த உறவுகளையும்போல] காந்தி சரளா ராணியை மணம்புரிந்துகொள்ள விரும்பினார். கஸ்தூரிபாவுடன் உறவை முறித்துக்கொள்ளவும். காந்தி ஏற்கனவே காம ஒறுப்பு நோன்பை கடைப்பிடித்து வந்தவர்.
சரளா ராணியை மணம்புரிய விரும்புவதை காந்தி தன் மகன் தேவதாஸ் காந்தியிடம் விவாதித்தார். தேவதாஸ் அது அன்னையை கடுமையாகப் புண்படுத்தும் என காந்தியிடம் தெரிவித்தார். காந்தி பல கோணங்களில் யோசித்தபின் மகனின் கருத்தை ஏற்றுக்கொண்டார். சரளா ராணியிடம் உறவை முறித்துக்கொள்வதாக கடிதம் வழியாக அறிவித்தார்
ஆனால் சரளா ராணி கடுமையாக புண்பட்டார். காந்தி மேல் கசப்பு கொண்டு கடைசி வரை காந்தியை தாக்கிக்கொண்டே இருந்தார். அது ஒரு சிக்கலான உறவு. காந்தியே சொன்னபடி அது ஒரு உளமயக்கம். அதில் பெரும்பகுதி காந்தியின் கற்பனைச்சிக்கல்.
நான் காந்தியும் காமமும் என்னும் கட்டுரையில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். காந்தியின் பாலியல் குறித்த விவாதம் அது. காந்தி ஒரு வழக்கமான இந்திய உள்ளம் கொண்டவர் அல்ல. அவர் பெரும்பாலும் ஐரோப்பியராகவே நடந்துகொண்டார். அவருடைய பாலியல் நம்பிக்கைகள், பாலியல் ஒறுப்பு குறித்த நம்பிக்கைகள்கூட ஐரோப்பியப் பின்புலம் கொண்டவை. அவர் அன்றைய ஐரோப்பிய மாற்றுப் பண்பாட்டுக்கும் சமணப் பண்பாட்டுக்கும் நடுவே ஒரு குழப்பமான நிலையில் ஊசலாடியவர் என்பது என் மதிப்பீடு.
குறைந்தது, காந்தி எதையும் ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை என்பதையாவது நீங்கள் கருத்தில்கொள்ளலாம்.
ஜெ
டியர் ஜெ.மோ..
உங்கள் பதில் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சி.24 மணி நேரத்தில் இந்த மனிதனுக்கு மட்டும் இத்தனையும் எப்படி சாத்தியப்பட்டிருக்கிறது என்றுயோசிக்கவும் பொறாமைப்படவும் வைத்திருக்கும் மனிதர் நீங்கள் தான். எனக்குத் தெரியும்.. உங்களுடன் உரையாடலைத் தொடர்வதற்கு முன் அது குறித்து நீங்கள் எழுதி இருக்கும் அனைத்தையும்வாசித்துவிட்டு பேசுவது தான் சரியானதும் முறையானதும் கூட.
ஆனால் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை.இங்கே உடனே அதைப் பெறுவதற்கோ அல்லதுஅதைப் பற்றிப் பேசுவதற்கோ கூட வாய்ப்புகள் இல்லை.எனவே மன்னிக்கவும்.
உங்கள் மேலதிக தகவலுக்காக,காந்தி polygamy பற்றி விவாதம் செய்திருப்பதாக குறிப்பு வருகிறது.
In his famous interview with Margaret Sanger, the American birth control activist and sex educator, he admitted that he had arguments about polygamy with a “woman with whom I almost fell….” Talking further about Saraladebi though without specifically taking her name, Gandhi said, “…it is so personal I did not put it in my autobiography. We had considered if there can be this spiritual companionship…. I came in contact with an illiterate woman (referring to his wife Kasturba). Then I met a woman with a broad, cultural education…and I nearly slipped. But I was saved…I don’t know how…by the youngsters who warned me. I saw that if I was doomed, they were also doomed.” There is also a clear reference to this relationship in Gandhi’s diary during 1947, where he writes that he would not look for the company of women purely for physical reasons “with one exception”, and from all accounts, that had to be Saraladebi Chowdhurani.
ஆதாரம்
https://www.outlookindia.com/
மிக்க நன்றியும் அன்பும்,
புதியமாதவி