பால் இரு சுட்டிகள்

Milk

பால் – இறுதியாக…

பால் அரசியல்

அன்புள்ள ஜெ,

தங்களது தளத்தில் பால் பற்றிய உரையாடலைப் பார்க்க நேர்ந்தது…

http://ksdhileepan.blogspot.com/2015/08/blog-post.html குங்குமம் டாக்டர் இதழில் பால் பற்றி எழுதிய கவர்ஸ்டோரியின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்… இதில் பேட்டி கொடுத்திருக்கும் மருத்துவர் ஜெகதீசன் ‘மெல்லக் கொல்லும் பால்’ எனும் நூலை எழுதியிருக்கிறார்…

கி.ச.திலீபன்

IMG-20190308-WA0015-01

அன்பின் நண்பருக்கு,

வணக்கம்.

நலமா?

பால் பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். போலி மற்றும் கலப்படப் பால், பால்மா குறித்த கவனத்துக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு, உலகில் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதை தமிழ் உலகத்துக்கு எடுத்துரைத்த முதல் இந்தியத் தமிழ் ஊடகம் உங்களுடையதென நினைக்கிறேன். மிகப் பெரும் சேவை இது. மக்களை விஷத்தை அருந்த விடாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதுவும் ஊடகவியலாளர்களினதும், எழுத்தாளர்களினதும், ஊடகங்களினதும் கடமை. பால் மாக்களை விளம்பரப்படுத்த முந்திக் கொண்டு வரும் ஊடகங்கள், போலி பால் மாக்களின் தீய விளைவுகளைக் கவனத்தில் கொள்வதேயில்லை. அவற்றுக்குத் தேவை பணம் மாத்திரமே.

அண்மைக்காலத்தில் இலங்கையிலும் போலி, கலப்படப் பால் மா விவகாரம் பெரும் சர்ச்சையைக்  கிளப்பியிருக்கிறது. அதைக் குறித்த எனது கள ஆய்வுக் கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். இந்தக் கட்டுரை இலங்கையின் ‘விடிவெள்ளி’ நாளிதழில் வெளியானது. இதற்கிணங்க இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகள் பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்  செய்தியை நேற்றைய தினகரன் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. விரைவில் நல்லது நிகழுமென எதிர்பார்ப்போம்.

என்றும் அன்புடன்,

எம்.ரிஷான் ஷெரீப்

பதறவைக்கும்பால்மாபீதி!

எம். ரிஷான்ஷெரீப்

முந்தைய கட்டுரைவெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை
அடுத்த கட்டுரைபங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா