எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது

 

தமிழ் புதுக்கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான எஸ்.வைத்தீஸ்வரனுக்கு இவ்வருடத்திய விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியில் தொடங்கி நீளும் ஒரு நேர்ப்பாதை ஒன்று உண்டு. தி.சொ.வேணுகோபாலன் நாரணோ ஜெயராமன் போன்றவர்களை அதற்கு உதாரணமாகச் சொல்வதுண்டு. அவ்வரிசையைச்சேர்ந்தவர் வைத்தீஸ்வரன்.

இவ்வரிசையினரின் கவிதைகளில் எப்போதும் ஒரு நேரடித்தன்மை உண்டு. படிமங்களின் தனிமொழி வழியாக ஆழ்பிரதியை மட்டும் உண்டுபண்ணும் நவீனப்புதுக்கவிதைகளின் நடுவே இவை எளிய சித்தரிப்புகள் என்ற பாவனையை மேற்கொண்டு பேச முற்படுகின்றன. ஆனாலும் இவற்றின் மொழி படிமங்களினால் ஆனதே. ந.பிச்சமூர்த்தியின் ‘கொக்கு’ என்ற கவிதை இந்தவகை கவிதைகளுக்கு முதல்புள்ளி. அந்த வரிசையின் முக்கியமான கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன்.

எஸ்.வைத்தீஸ்வரனை வாழ்த்துகிறேன்

முந்தைய கட்டுரைஆன்மீகம், சோதிடம், தியானம்
அடுத்த கட்டுரை‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’