அன்புள்ள ஜெ
உங்கள் பார்வைக்காக
என்னாது… எழுத்தாளர் ஜெயமோகன் டாக்டரா? – 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் குளறுபடிகள்
வேலுமணி
அன்புள்ள வேலுமணி
நானறிந்த காலம் முதல் கேள்வித்தாளில் பிழைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. இல்லையேல் நான் பட்டப்படிப்பை முடித்திருப்பேனே?
ஜெ
https://www.facebook.com/
அன்புள்ள ஜெ வணக்கம்…
கட்டண உரை அறிவிப்பு படத்தில் ஒலிவாங்கி முன் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்திருந்தீர்கள்.
இங்கே ஒருவர் கச்சேரியே நிகழ்த்துகிறார்.
மு.கதிர் முருகன்
கோவை
அன்புள்ள கதிர்
இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பொதுவாக எல்லா நாய்களுமே கூரிய ஒலிகளில் எழும் இசைக்கு எதிர்வினை ஆற்றும். எங்கள் வீட்டுப்பக்கத்தில் ஒரு நாய் ரயில் ஓசைக்கு எதிர்வினை அளிக்கும். சில குறிப்பிட்ட பாடல்களுடன் நாய்கள் சேர்ந்து பாடுவதை கண்டிருக்கிறேன். உதாரணமாக நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா, ராசாத்தீ என்னுயிரு என்னதில்ல போன்ற ‘பிட்ச்’ உள்ள பாடல்கள்.
அதிலும் ஒன்றுண்டு. பாட்டுகளுக்கு எதிர்ப்பாட்டு எடுப்பவை சிறியவகை நாய்கள். நம்மூர் நாட்டு நாய் சிறந்த பாடகன். இந்த இணைப்பில் உள்ளதுபோல பெரிய காதுகள் உள்ள நாய்கள் பொதுவாக நன்றாக பாடக்கூடியவை. ப்ளூஸ் வகைப் பாடல்கள் அவற்றால் பாடப்படுகின்றன. நமது மொழியில் அல்ல என்பதே வேறுபாடு.
ஜெ