இந்த இணையதளத்தில் கோவை தியாகு புத்தக நிலையம் பற்றி எழுதியிருந்தேன். பின்பு பாளையங்கோட்டை புத்தகநிலையம் பற்றியும். அதைப்பற்றி கோமதி சங்கர் இப்படி எழுதியிருந்தார்
‘புதிய நூலகங்கள் பற்றிய செய்தி மகிழ்வைத் தருகிறது .இது போன்ற நூலகங்களை எழுத்தாளர்கள் தார்மீக ரீதியாகவாவது புரவலர்களாக இருப்பது அவசியம் என்று படுகிறது நாகர்கோயிலில் ஓவன்ஸ் என்று நல்ல ஒரு நூலகம் இருந்து தி நல்லதொரு தொகுப்பு இருந்த நூலகம்.அங்கு வேறு ஏதோ வணிடீரென்று மூடப் பட்டது.தமிழில் இல்லாவிடிலும் ஆங்கிலத்தில்க வளாகம் வருகிறது எனறார்கள்.பொதுவாக தென் தமிழகத்தில் அரசு நூலகங்களை விட்டால் வேறு கதியே இல்லை.அரசு நூலகங்கள் பற்றி அறிவோம்தானே ..இது போன்ற நூலகங்களையும் அதிகம் அறியப் படாத புத்தகக் கடைகளையும் எழுத்தாளர்கள் கவனப் படுத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழகம் முழுவதும் உள்ள இது போன்ற நூலகங்களையும் புத்தகக் கடைகளையும் பற்றிய ஒரு வரிசை தயாரிக்கலாம்’
நல்ல யோசனை என்று படுகிறது. பலருக்கும் உதவியாக இருக்கும். இந்த இணைப்புக்கு கீழே மட்டும் பின்னூட்ட வசதி அளிக்கப்படுகிறது. அதில் நண்பர்கள் அவர்கள் ஊரில் உள்ள, அவர்கள் அறிந்த புத்தகக் கடைகள், வாடகைநூல் நிலையங்களைப்பற்றி விலாசத்துடன் அறிமுகம் செய்தால் நல்லது.