இரு கதைகள் – கடிதங்கள்

திருமுகப்பில்…..

 

அன்புள்ள ஜெமோ,

உங்கள் பார்வைக்கு இந்த காணொளி.

இதில் காளிச்சரணும் இருக்கிறார் சாவித்திரியும் இருக்கிறார்.

அன்புடன்,
வா..ஜெய்கணேஷ்

 

யானை – புதிய சிறுகதை

அன்பு ஜெமோ,
யானை சிறுகதை படித்தேன். முற்றிலும் புதிய குழந்தை உலக அவதானிப்பு வெளிப்படும்கதை.
அனந்தன் கண்களாலும் செவிகளாலும் உண்மையில் உலகை அறிந்து கொண்டே இருக்கிறான். செருப்பை தப்பி என்றும் சுவரை அப்பை என்றும் படிகளை டக்கு என்றும் பொருத்தமாகபெயரிட்டு அழைக்கிறான். பள்ளியில் யாரும் கவனிக்காத எறும்புகளை, வீசும்காற்றை பார்க்கிறான். பசியை வரையத்தெரிகிறது.
எல்லா அறைகளையும் நிறைத்து, எல்லாவற்றையும் புதிதாகப் பார்த்துக்கொண்டேஇருப்பவனுக்கு, ஒரே அறையில் பல மணிநேரம் உட்கார வைப்பது போல் வேறொருதண்டனையில்லை. அந்தச் சிறையை தன கற்பனை கொண்டு உடைத்து, வெளியில்உலவுகிறான். வகுப்பறையில் கடைசியில் உட்கார்ந்தாலும் வந்து பிடித்துவிடும் யானையாக, எழுத்துக்களுடன் கரும்பலகையை காண்கிறான்.
பிறர் காணாத உலகத்தை பார்ப்பவர்களும், கேட்பவர்களுமே பிறரால் படைக்கஇயலாதவற்றை உருவாக்க இயலும். குழந்தைப் பருவத்தை தாண்டியவர்கள், சற்றேபிறழ்ந்தாலொழிய அந்நிலையை அடைவது கடினம்தான் போல. சிறந்த வாசிப்பனுபவம். நன்றி!

அன்புடன்
ராஜன் சோமசுந்தரம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74
அடுத்த கட்டுரைகட்டண உரை, ஐயங்கள்