பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

pinthodarum-nizhalin-kural_FrontImage_261

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துத் தொடங்கி குறைந்தது முந்நூறு பக்கங்கள் சரசரவென வாசித்துவிட்டேன். அருணாச்சலம், அவரின் மனைவி, தொழிற்சங்கங்கள், அதன் வாழ்க்கை, கம்யூனிசம்.. இவ்வரிசையில் பயணிக்கும் அருணாச்சலம் அடையும் மனப் போராட்டங்கள் அனைத்தையும் நானும் அடைந்தேன். படித்து முடித்தபின் விரிவாகவே எழுதுகிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று வாசிப்பைத் தொடர்ந்தேன். அன்னாவிற்கும் புகாரினிக்கும் நடக்கும் உரையாடல்களைக் கடக்க முடியாமல் கண்கள் கலங்கிக்கொண்டே இருக்கிறது. அன்னாவின் முன் மண்டியிட்டு புகாரின் வாக்குமூலம் கொடுப்பது எனக்கு குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் முன் உடைந்து அழுவதை நினைவுறுத்தியது. இந்நாவலிலும் அருணாச்சலம் அவன் மனைவியின் மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையைப் போல் முற்றிலும் அவளிடம் சரணடைந்து தன்னை அவ்வபோது மீட்டுக்கொள்கிறான். எப்படி ஒரு பெண்ணால் அனைத்தையும் உள்வாங்கி மீட்பைத் தர முடிகிறது என மனம் திரும்பத் திரும்பக் கேட்க்கிறது. ஏசுவின் மரணம் தோல்வியைப் புனிதப்படுத்துவதாக ஒரு கதாப்பாத்திரம் பேசுகிறது. அன்னாவையும், சோனியாவையும் பார்க்கும்போது கடவுளின் குழந்தை ஒரு பெண்ணாக மட்டும் இருந்திருந்தால் எந்தவிதக் குற்றவுணர்வையும் தராமல், எல்லாவற்றையும் அவள் எடுத்துக்கொண்டு இவ்வுலகிற்கு மீட்பைத் தந்திருப்பாள் என்று எண்ணுகிறேன்

சைபீரியப் பனியால்அணைக்க முடியாத நெருப்பைச் சுமக்க அன்னா என்னும் பெண்ணால்தானே முடிகிறது…

நினைக்க நினைக்க தேவதைகள் தரும் பேரன்பைக் கடவுளால் கூடத் தரமுடியாது என்றே தோன்றுகிறது..

இதுவரை இந்நாவல் பல்வேறு விதமான மன நிலைகளைத் தந்துவிட்டது.  மரணத்தைப் பற்றிய பயம் எப்போதும் என் நெஞ்சின் ஓரத்தில் எரிந்துகொண்டேயிருக்கும். சோம்பல் குணத்தினாலோ அல்லது இந்த பயத்தினாலோ ஒரு பெரும் சலிப்பை எப்போதும் சுமந்து அலைபவன் நான். சைபீரியப் பனி சீக்கிரம் உருகிவிட்டால் சற்று நிம்மதியாய் வாசிப்பைத் தொடர்வேன்…

நன்றி,
சங்கர் விஸ்வநாதன்

Anna_Larina
அன்னா புகாரினா லாரினா

அன்புள்ள ஜெ

பின் தொடரும் நிழலின் குரலை வாசிக்க ஆரம்பித்து நெடுநாட்களாகின்றது. நடுவே இரண்டுமுறை வாசிப்பதை விட்டுவிட்டேன். ஒட்டுமொத்தமாக நாவலை உள்வாங்கிக்கொள்ள எனக்கு கொஞ்சம் கஷ்டம் இருந்தது. கடைசியாக இன்றுதான் முடித்தேன். மீண்டும் ஒருமுறை ஆரம்பத்திலிருந்து வாசித்து முடிக்கவேண்டும் என நினைக்கிறேன்

அரசியல், குடும்பம், வரலாறு, தொன்மம் என்னும் நான்கு தளங்களில் ஒரு பிரச்சினையைப் பேசியிருக்கிறீர்கள். கண்மூடித்தனமான கொள்கைப்பற்று அல்லது கோட்பாட்டு அடிமைத்தனம் எங்கு கொண்டுசென்று சேர்க்கும் என்பதை பேசும் நாவல் இது. இதுகாறும் மானுட வரலாற்றில் வீழ்த்தப்பட்ட ரத்தம் மதம் அரசியல் என்னும் பெயர்களில் கருத்துப்பற்று உருவாக்கியதே ஆகும். அரசியலில் அது எப்படி நட்பு அன்பு அனைத்துக்கும் அப்பால் செல்கிறது என காட்டுகிறது ஒரு கதை. வரலாற்றுப்பின்னணியாகச் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை எடுத்துக்கொள்கிறது. தொன்மமாக சாத்தான்- தேவன் என்னும் உருவகம் வருகிறது.

ஆனால் ஆழமானதாக இருப்பது குடும்பம்தான். கடைசிட்யாக அருணாச்சலத்தைக் கைவிடாமலிருப்பதும் குடும்பமே. இந்நாவலின் அசையாத ஆணிக்கல் நாகம்மைதான் அன்னா கூட நாகம்மையின் இன்னொரு வடிவம்தான். அவர்கள் ஒருவரே

காசிவிஸ்வநாதன்

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்

கத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழல்

பின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

பின் தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் பற்றி

பின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்

பெர்லின் சுவர் – பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம்

பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து

பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்

பின்தொடரும் நிழலின் குரல், காந்தி

பின்தொடரும்

பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

பின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு

பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…

பின்தொடரும் நிழலின் வினாக்கள்

நிழலின் குரல்களைப்பற்றி…

பின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்

பின் தொடரும் நிழலின் அறம்

பெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து

பின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்

பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்

முந்தைய கட்டுரைவலைத்தளமும் விளம்பரமும்
அடுத்த கட்டுரைஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்